இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை எசே 37:4



Rev.Fr.R.John Joseph



கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !


  • வார்த்தையில் உயிர் இருக்கிறது:
    • கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது; ஆற்றல் வாய்ந்தது – எபி 4:12.
    • ஆண்டவரின் திருச்சட்டம் புத்துயிர் அளிக்கிறது – தி.பா 19:7.
    • மனிதர் கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றார் - இ.ச. 8:3.
    • இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள் மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார் - உரோ 4:17.


  • வாழ்வு தரும் வாரத்தை:
    • நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியை கொடுக்கின்றன; வாழ்வு தருவது தூய ஆவியே – யோவா 6:63.
    • நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன – யோவா 6:68.
    • பாலைநிலத்தில் வாழ்வளிக்கும் வார்த்தைகளை பெற்று கிறிஸ்தவர் இவரே (மோசே) – தி.தூ 7:38.
    • கடவுளின் வார்த்தையால் புதுப்பிறப்பு அடைந்துள்ளீர்கள் - 1பேது 1:23.
    • அவருடைய கட்டளை நிலை வாழ்வு தருகிறது என்பது எனக்கு தெரியும் - யோவா 12:50.


  • குணமளிக்கும் வார்த்தை:
    • பச்சிலையோ களிம்போ அவர்களுக்கு நலமளிக்கவில்லை. ஆனால் ஆண்டவரே உமது சொல்லே எல்லா மனிதர்க்கும் நலம் அளிக்கிறது – சா.ஞ 16:12.
    • தம் வார்த்தையை அவர் அனுப்பி அவர்களை குணப்படுத்தினார். அழிவினின்று அவர்களை விடுவித்தார் - தி.பா 107:20.
    • நீ என் குரலுக்கு செவிசாய்த்து, சட்டங்களை கைகொண்டால் கொள்ளைநோய் உன் மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னை குணமாக்கும் ஆண்டவர் - வி.ப 15:26.


  • பாதுகாக்கும் வார்த்தைகள்:
    • மனிதரை பேணி காப்பது நிலத்தின் விளைச்சல் அல்ல, மாறாக உமது சொல்லே உம்மை நம்பினோரை காப்பாற்றுகிறது – சா.ஞ 16:26.
    • என் வார்த்தையை கடைபிடித்தால் உண்மையை அறிந்தவர்களாயிருப்பீர்கள்; உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் - யோவா 8:32.
    • என் காலடிக்கு உன் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! – தி.பா 119:105.


  • படைக்கும் வார்த்தை:
    • இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள் மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார் - உரோ 4:17.
    • அவர் ஒரு வார்த்தை சொல்ல புயல்காற்று எழுந்தது; கடலின் அலைகளைக் கொந்தளிக்கச் செய்தது – தி.பா 107:25.
    • என் ஆவியும் உன்வாயில் நான்வைத்துள்ள என் வார்த்தைகளும் உன் வாயினின்று இன்றும் என்றென்றும் நீங்கிவிடாது – எசா 59:21.


  • சொற்களை நினைக்க துன்பம்:
    • உம் சொற்கள் அவர்கள் நினைவு கூரும் பொருட்டு அவர்கள் கடிபட்டார்கள். ஆனால் உடனே நலம் அடைந்தார்கள். அவர்கள் ஆழ்ந்த மறதிக்கு உள்ளாகி, உம் பரிவை உதறித்தள்ளாதபடி இவ்வாறு நடந்தது - சா.ஞ 16:11.
    • என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும், அது என் விருப்பத்தைச்செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை – எசா 55:11.


விடுவிக்கும் வார்த்தை



  • உயிர் கொடுத்த வார்த்தை:
    • சிறுமி - உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு – மாற் 5:41.
    • இளைஞன் - நான் உனக்குச் சொல்கிறேன் எழுந்திடு என்றார் - லூக் 7:41.
    • லாசர் - “இலாசரே வெளியே வா” என்று கூப்பிட்டார் - யோவா 11:43.


  • குணமளித்த வார்த்தை:
    • தொழுநோய் - “உமது நோய் நீங்குக!” என்று சொன்னார் - மத் 8:3.
    • திமிர்வாதம் - படுக்கையை எடுத்துக் கொண்டு உனது வீட்டுக்குப் போ என்றார் - மாற் 2:11.
    • சூம்பிய கை – “கையை நீட்டும் என்றார்” – மாற் 3:5.
    • அரச அலுவலர் மகன் - வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார் - யோவா 4:50. (47-53).
    • நூற்றுவர் - ஒரு வார்த்தை மட்டும் சொல்லும், என் பையன் நலமடைவான் - மத் 8:13.


  • ஆபத்தில் பாதுகாத்த வார்த்தை:
    • புயல் - “இரையாதே, அமைதியாயிரு” என்றார் - மாற் 4:39.


  • தொழிலில் ஆசீர் அளித்த வார்த்தை:
    • மீன்பிடித்தல் - உமது சொற்படியே வலைகளை போடுகிறேன் - லூக் 5:5.


இந்த வார்த்தையை சொந்தமாக்கு


  • நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பி கேட்பதெல்லாம் நடக்கும் - யோவா 15:7.
  • நான் உனக்கு கூறும் சொற்களையெல்லாம் செவிகொடுத்து கேட்டு உன் இதயத்தில் பதித்து கொள் - எசே 3:10.
  • நான் உனக்கு தருகின்ற இச்சுருளேட்டை தின்று உன் வயிற்றை நிரப்பு – எசே 3:3.
  • உன் வாயை திறந்து நான் உனக்கு தருவதை தின்று விடு – எசே 2:8.
  • நீ காண்பதைத் தின்றுவிடு, இச்சுருளேட்டை தின்றபின் இஸ்ரயேல் வீட்டாரிடம் போய் பேசு – எசே 3:1.
  • ஆண்டவரின் வாய்மொழிந்த கட்டளை இது, அவரது ஆவிதான் இவற்றை ஒருங்கிணைத்தது – எசா 34:16.
  • என்மீது அன்புகூர்ந்து உன் விதிமுறைகளைக் கடைபிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன் - வி.ப. 20:6.
  • உங்களுக்கு எல்;லாம் நலமாகும் பொருட்டு நான் இன்று கற்பிக்கின்ற அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீங்கள் கடைபிடிக்க வேண்டுமென்பதன்றி, அவர் உங்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கின்றார்? - இ.ச. 10:13.
  • நீ காட்டுகிற இக்கோவிலைக் குறித்து நான் உன் தந்தை தாவீதுக்குச் சொன்ன என் வாக்கை உன்னிடம் நிறைவேற்றுவேன் - 1அர 6:12.
  • நான் இன்று உங்கள் முன் வைக்கின்ற நியமங்களையும் முறைமைகளையும் நிறைவேற்றுவதில் கருத்தாய் இருங்கள் - இ.ச. 11:32.
  • நல்லவர் ஒருவரே, நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைபிடியும் என்றார் - மத் 19:17.
  • நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும் - இ.ச. 4:40.
  • உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை – தி.பா 119:103.
  • நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன். அவற்றை உட்கொண்டேன்; உம் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன; என் உள்ளத்திற்கு உவகை அளித்தன – எரே 15:16.


இறைவாக்குரை


  • அவர்கள் செவிசாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும் என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு – எசே 2:7.
  • மானிடா, புறப்படு இஸ்ரயேல் வீட்டாரிடம் போய் என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு – எசே 3:5.
  • இஸ்ரயேல் வீட்டார் நான் சொல்வதை கேட்க விரும்பாததால், நீ சொல்வதையும் கேட்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் தலைகனமும், கல்நெஞ்சமும் கொண்டவர்கள் - எசே 3:7,17.
  • என் சொற்களை உன் நாவில் அருளினேன். என் கை நிழலில் உன்னை மறைத்து கொண்டேன் - எசா 51:16.
  • சிறுபிள்ளை நான் என்று சொல்லாதே; யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகிறேனோ அவர்களிடம் சொல்; எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல் - எரே 1:7.
  • புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல்; அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல் அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன் - எரே 1:17.
  • இவ்வுடன் படிக்கையின் விதிமுறைகளைக் கேட்டு யூதாவின் மக்களுக்கும் எருசலேமில் குடியிருப்போருக்கும் அறிவிப்பாய் - எரே 11:2.
  • நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய வார்த்தைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள் என்றார் - தி.தூ 5:20.
  • நீ இவைபற்றிப் பேசு; முழு அதிகாரத்தோடும் அறிவறுத்திக் கடிந்து கொள். யாரும் உன்னைத் தாழ்வாக மதிப்பிட இடமளிக்காதே – தீத் 2:15.


  • பிலயாம்:
    • அவர் எதையெல்லாம் எனக்குக் காண்பிக்கிறாரோ அதை உமக்கு அறிவிப்பேன் - எண் 23:2.
    • அவர் அவரது வாயில் ஒரு வார்ததையை வைத்து, பாலாக்கிடம் திரும்பிப்போய் இப்படியே பேசு என்று சொன்னார் - எண் 23:16.
    • பிலயாம் திரு உரையாகக் கூறியது; பாலாக்கு எழுந்து கேள்; கிப்போர் மகனே எனக்கு செவிகொடு – எண் 23:18.
    • யாக்கோபுக்கு எதிரான மந்திர மாயம் ஏதுமில்லை; இஸ்ரயேலுக்கு எதிரான குறி கூறல் யாதுமில்லை – எண் 23:23.


  • மிக்கேயால்:
    • ஆண்டவர் என்னிடம் சொல்வதையே நான் உரைப்பேன் என்றார் - 1அர 22:14.
    • நான், யாக்கோபுக்கு அவன் குற்றத்தையும் இஸ்ரயேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்க, வல்லமையாலும் ஆண்டவரின் ஆவியாலும், நீதியாலும் ஆற்றலாலும் நிரப்பப்பட்டுள்ளேன் - மீக் 3:8.


  • பிலிப்பு:
    • ஆண்டவரின் தூதர் பிலிப்பிடம், “நீர் எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப்போ” என்றார். அது ஒரு பாலை நிலப்பாதை. பிலிப்பு அவ்வாறே புறப்பட்டுப் போனார் - தி.தூ 8:26,27.
    • தூய ஆவியார் பிலிப்பிடம் “நீ அந்தத் தேரை நெருங்கிச் சென்று அதனோடு கூடவே போ” என்றார் - தி.தூ 8:29.
    • பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு, நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா? என்று கேட்டார் - தி.தூ 8:30.
    • அதற்கு அவர் யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்து கொள்ள முடியும்? - தி.தூ 8:31.
    • அப்போது, பிலிப்பு, இந்த மறைநூல் பகுதியிலிருந்து தொடங்கி, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவருக்கு அறிவித்தார் - தி.தூ 8:35.


  • எரேமியா:
    • நான் பேசும் போதெல்லாம் வன்முறை அழிவு என்றே கத்த வேண்டியுள்ளது; ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது – எரே 20:8.
    • அவர் பெயரை சொல்லமாட்டேன்; அவர் பெயரால் இனிப்பேசவும் மாட்டேன்; என்பேனாகில், உம்சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. என் எலும்புகளுக்கு அடைபட்டு கிடக்கின்றது – எரே 20:9.
    • ஆனால் இந்த வாக்கிற்குச் செவிகொடுக்காவிட்டால் இந்த அரண்மனை பாழ்பட்டுப் போகும் என என் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்கிறார் ஆண்டவர் - எரே 22:5.


உலர்ந்த எலும்புகளே ஆண்டவரின் வாக்கை கேளுங்கள்

  • வெற்றிக்கு வெகு தொலைவில் இருப்போரே செவிகொடுங்கள் - எசா 46:12.
  • விடுதலை நாடுவோரே, ஆண்டவரை தேடுவோரே எனக்கு செவிகொடுங்கள் - எசா 51:1.
  • என் மக்களே, நான் சொல்வதை கேளுங்கள், என் இனமே எனக்கு செவிகொடு, திருச்சட்டம் என்னிடமிருந்து புறப்பட்டு செல்லும் - எசா 51:4.
  • என் சட்டத்தை இதயத்தே தாங்குவோரே எனக்கு செவிகொடுங்கள் - எசா 51:7.
  • எனக்கு கவனமாய் செவிகொடுங்கள். நல்லுணவை உண்ணுங்கள் கொழுத்ததை உண்டு மகிழுங்கள் - எசா 55:2.
  • எனக்கு செவிகொடுங்கள், கேளுங்கள் அப்பொழுது வாழ்வீர்கள் - எசா 55:3.
  • நல்லவழி எது? என்று கேளுங்கள் அதில் செல்லுங்கள், அப்பொழுது உங்களுக்கு அமைதி கிடைக்கும் - எரே 6:16.
  • என் குரலுக்கு செவி கொடுங்கள், அப்பொழுது நான் உங்களுக்கு கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள் - எரே 7:23.
  • அவருடைய கட்டளைகளை எப்போதும் உள்ளத்தில் இருத்து. அவரே உன் உள்ளத்திற்கு தெளிவூட்டுவார். நீ விரும்பும் ஞானத்தை உனக்கு அருள்வார் - சீரா 6:37.
  • எனக்கென தூயவர்களாக இருப்பீர்களாக. ஆண்டவராகிய நான் தூயவராயிருந்து, நீங்கள் என்னுடையவர்களாக இருக்கும்படி உங்களை மக்களினங்களினின்று பிரித்தெடுப்பேன் - லேவி 20:26.
  • என் கட்டளை கைகொண்டு அவற்றின்படி நடயுங்கள். நானே உங்களை தூய்மைப்படுத்தும் ஆண்டவர் - லேவி 20:8.
  • என் வாயிற்படியில் நாள்தோறும் விழிப்புள்ளவராய் நின்று, என் கதவு நிலையருகில் காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கின்றோர் நற்பேறு பெற்றோர்! – நீ.மொ 8:34.
  • போதனைக்கு செவிகொடுப்பவன் வாழ்வடைவான் - நீ.மொ 16:20.
  • காலை வருகிறது, அவ்வாறே இரவும் கேட்பதென்றால் கேளுங்கள். மீண்டும் திரும்பி வாருங்கள் - எசா 21:12.



 

 

 

 

My status







 

உயிர்த்த இயேசு

சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.


மரித்த இயேசு உயிர்த்துவிட்டார்.



 

யூதா ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்.



 


அஞ்சாதீர்கள்! நான் உலகை வென்றேன்.



சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.



உயிர்த்த இயேசு, சீடர்களை உறுதிப்படுத்தினார்.



 


மன்னாதி மன்னன் இயேசு, உயிர்த்தெழுந்தார்.



 


இயேசு உயிர்த்தார். இனி நாமும் உயிர்ப்போம்.



சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.



 


இயேசு, கல்லறையில் இல்லை.



 


அம்மா அழாதீர்!



 


உயிர்த்த இயேசு மதலேன் மரியாளிடம்.



 


என் சீடருக்கு இதை அறிவிப்பீர்.



 


சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.



சீடர்களின் விசுவாசத்தை, உறுதிப்படுத்தினார்.



 


உயிர்த்த இயேசு, சீடர்களை உறுதிப்படுத்தினார்.



 


விசுவாசம் அற்றவனாயிராதே.



 


நான் தான் அஞ்சாதீர்கள்.



சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.



 


திபேரியாக் கடலருகில், உயிர்த்த இயேசு



 


பிள்ளைகளே! சாப்பிட வாருங்கள்.



 


சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.



உயிர்த்த இயேசு, எம்மாவூஸ் சீடரோடு.



 


உயிர்த்த இயேசு, மறைநூலை விளக்கினார் .



 
 
copyrights © 2012 catholicpentecostmission.in