உங்கள் கல்லறைகளை திறப்பேன்-எசே 37:12Rev.Fr.R.John Josephகிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !


 • சாவை அல்ல வாழ்வையே விரும்புகிறேன்:
  • தீயோர் சாக வேண்டுமென்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். ஆகவே உங்கள் தீய வழிகளினின்று திரும்புங்கள் - எசே 33:11.
  • நானே அவனுக்கு செவிசாய்த்து அவன் மேல் அக்கறை கொண்டுள்ளேன் - ஓசே 14:8.
  • அடிமை தனத்தினின்று உங்களை அழைத்து வருவேன். நான் உங்களை விரட்டியடித்துள்ள இடங்களிலிருந்து கூட்டி சேர்ப்பேன் - எரே 29:14.
  • தீயோர் சாவது உறுதி என்று நான் சொன்னாலும், வாழ்வளிக்கும் நியமங்களின்படி நடந்து தீச்செயல் எதுவும் செய்யாதிருந்தால் அவர்கள் வாழ்வது உறுதி – எசே 33:14,15.
  • அவர்கள் செய்த பாவம் எதுவுமே அவர்களுக்கெதிராக எண்ணப்படமாட்டாது. நீதியையும் நேர்மையையும் அவர்கள் கடைப்பிடித்ததால் அவர்கள் வாழ்வது உறுதி – எசே 33:16.


 • கல்லறை வாழ்வு:
  • நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள் போல் இருக்கிறீர்கள்; மக்களும் கல்லறைகள் என தெரியாமல் அவற்றின் மேல் நடந்து போகிறார்கள் - லூக் 11:44.
  • அவர்கள் வாயில் உண்மை இல்லை. அவர்கள் உள்ளம் அழிவை உண்டாக்கும், அவர்கள் தொண்டை திறந்த பிணக்குழி. அவர்கள் நா வஞ்சகம் பேசும் - தி.பா 5:6.
  • அவள் வீடு பாதாளத்துக்கு செல்லும் வழி. சாவுக்கு இட்டு செல்லும் பாதை – நீ.மொ 7:27.
  • அவர்களது தொண்டை திறந்த பிணக்குழி; அவர்கள் நாக்கு வஞ்சகமே பேசும்; அவர்கள் உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சு – உரோ 3:13.
  • உன் இறுமாப்பு பாதாளம் வரை தாழ்த்தப்பட்டன. புழுக்கள் உனக்கு கீழ்படுக்கையாகும். பூச்சிகள் உன் போர்வையாகும் - எசா 14:11.
  • நீ பாதாளம் வரை தாழ்த்தப்பட்டாய், படுகுழியின் அடிமட்டத்திற்கு தள்ளப்பட்டாயே - எசா 14:15.
  • பரிசேயர்கள் - நீங்கள் வெள்ளையடித்த கல்லறைக்கு ஒப்பானவர்கள்; அவை புறம்பே அழகாக தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன – மத் 23:27.
  • நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும், நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள் - மத் 23:28.
  • நீங்கள் கிண்ணத்தையும், தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்குள்ளே கொள்ளையும், தீமையும் நிறைந்திருக்கின்றன – லூக் 11:39.
  • வெள்ளையடிக்கபட்ட சுவரே கடவுள் உங்களை அடிப்பார். திருச்சட்டத்தின்படி எனக்கு தீர்ப்பளிக்கும் நீர் அச்சட்டத்திற்கு முரணாக என்னை அடிக்க எப்படி ஆணை பிறப்பிக்கலாம் - தி.தூ 23:3.


 • கல்லறை அனுபவம்:

 • i. யோபு :

  • கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா? கருவறையினின்று வெளிப்பட்டவுடனே நான் ஒழிந்திருக்கலாகாதா? – யோபு 3:11.
  • உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்? உள்ளம் கசந்தோர்க்கு உயிர் கொடுப்பானேன்? - யோபு 3:20.
  • கல்லறை காணின் களிப்பெய்தி அகமகிழ்வோர்க்கு வாழ்வு வழங்கப்படுவதேன்? – யோபு 3:22.
  • பெருமூச்சு எனக்கு உணவாயிற்று; வேதனைக்கதறல் வெள்ளமாய் ஒடிற்று – யோபு 3:24.
  • நான் அஞ்சியது எதுவோ அதுவே எனக்கு நேர்ந்தது; திகிலுற்றது எதுவோ அதுவே என்மேல் விழுந்தது – யோபு 3:25.
  • எனக்கு நிம்மதி இல்லை; ஓய்வு இல்லை; அமைதி இல்லை; அல்லலே வந்துற்றது – யோபு 3:26.
  • படுக்கும் போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன் - யோபு 7:4.
  • புழுவும் புழுதிப்படலமும் போர்த்தின என் உடலை; வெடித்தது என் தோல்; வடிந்தது சீழ் - யோபு 7:5.
  • என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன – யோபு 7:6
  • என் மனைவிக்கு என் மூச்சு வீச்சம் ஆயிற்று; என்தாயின் பிள்ளைகளுக்கு நாற்றம் ஆனேன் - யோபு 19:17.
  • குழந்தைகளும் என்னைக் கேலி செய்கின்றனர்; நான் எழுந்தால் கூட ஏளனம் செய்கின்றனர் - யோபு 19:18.
  • என் உயிர் நண்பர் எல்லாரும் என்னை வெறுத்தனர்; என் அன்புக்குரியவராய் இருந்தோரும் எனக்கெதிராக மாறினர் - யோபு 19:19.
  • நான் வெறும் எலும்பும் தோலும் ஆனேன்; நான் பற்களின் ஈறோடு தப்பினேன் - யோபு 19:20.
  • என் மேல் இரங்குங்கள்; என் நண்பர்கள்! என் மேல் இரக்கம் கொள்ளுங்கள்; ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது - யோபு 19:21.


  ii. பவுல் :

  • நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம் - 2கொரி 4:10.
  • உயிரோடிருக்கும் போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்றுக்கொண்டிருக்கிறோம் - 2கொரி 4:11.
  • சாவின் ஆற்றல் எங்களிலிலும் வாழ்வின் ஆற்றல் உங்களிலிலும் வெளிப்படுகிறது – 2கொரி 4:12.


  iii. இஸ்ரயேல் மக்கள் :

  • எகிப்தில் சவக்குழிகள் இல்லையென்றா நீர் எங்களை பாலைநிலத்தில் சாவதற்கு இழுத்து வந்தீர் - வி.ப. 14:11.
  • பாலைநிலத்தில் செத்தொழிவதை விட எகிப்தியருக்கு ஊழியம் செய்வதை நலம் - வி.ப. 14:1


  iv. சிம்சோன் : நீ.த 16:13-22.


 • கல்லறைகளை திறப்பேன்:

 • i. சட்டத்தால் :

  • திருத்தப்படுவதற்காக துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுங்கள். கடவுள் உங்களை தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ? – எபி 12:7.
  • அங்கு எக்காளம் முழங்கிற்று; பேசும் குரலொன்று கேட்டது. அக்குரலைக் கேட்டவர்கள் அதற்கு மேல் தங்களோடு அது ஒரு வார்த்தை கூடப் பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள் - எபி 12:19.
  • நான் உங்களுக்கு புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன் - எசே 36:26.
  • என் சட்டத்தை உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள் என்கிறார் ஆண்டவர் - எபி 8:10.
  • என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன். அதை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன் - எரே 31:33.
  • நான் இனி ஒருபோதும் என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்ளமாட்டேன். இஸ்ரயேல் வீட்டார் மீது என் ஆவியைப் பொழிவேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர் - எசே 39:29.
  • திருச்சட்டம் கற்பிக்கும் ஒழுக்க நெறி, தங்கள் உள்ளத்தில் எழுதப்பட்டிருக்கிறது – உரோ 2:15.
  • காலம் வருகிறது; அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர் - யோவா 5:28.


  ii. மன்னிப்பால் :

  • நொறுங்கிய நலிந்த நெஞ்சத்தினரோடும் நான் வாழ்கின்றேன்; நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவிக்கவும் நலிந்த நெஞ்சத்தினரை திடப்படுத்தவும் நான் குடியிருக்கிறேன் - எசா 57:15.
  • என்றென்றும் நான் குற்றஞ்சாட்டமாட்டேன்; எப்பொழுதும் சினம் கொண்டிருக்கமாட்டேன்; ஏனெனில், நான் தோற்றுவித்த உயிர் மூச்சாகிய மனித ஆவி என் திருமுன் தளர்ச்சியடைந்து விடும் - எசா 57:16.
  • நான் இஸ்ரயேல் மீது சினமடைந்து அவனை அடித்து நொறுக்கினேன்; சீற்றம் கொண்டு என்னை அவனுக்கு மறைத்துக்கொண்டேன்; அவனோ என்னை விட்டு விலகி மனம்போன போக்கிலே சென்றான் - எசா 57:18.
  • எப்ராயிமுக்கு நடைபயிற்றுவித்தது நானே; அவர்களை கையிலேந்தியதும் நானே; அவர்களை குணமாக்கியதும் நானே; என்பதை அவர்கள் உணராமல் போனார்கள் - ஓசே 11:3.0.
  • அன்புக்கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; கழுத்தின் மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன் - ஓசே 11:4.
  • என் மக்கள் என்னை விட்டு விலகி போவதிலே கருத்தாய் இருக்கிறார்கள் - ஓசே 11:7.
  • நான் உன்னை எப்படி கைவிடுவேன்; இஸ்ரயேலே நான் உன்னை எப்படி கைநெகிழ்வேன் - ஓசே 11:8.
  • என் சீற்றத்தின் கனலை கொட்டமாட்டேன்; எப்ராயிமே அழைக்க திரும்பி வரமாட்டேன் - ஓசே 11:9.


  iii. செவி கொடுக்க செய்து :

  • நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார் - எசா 50:4.
  • ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை – எசா 50:5.
  • என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்; என் நியமங்களைக் கடைபிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன் - எசே 36:27.


  iv. நானே தேடி செல்வேன் :

  • நானே என் மந்தையை தேடி சென்று பேணி காப்பேன் - எசே 34:11.
  • ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளை தேடி செல்வது போல நானும் என் மந்தையை தேடி போவேன்; மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன் - எசே 34:12.
  • நானே என் மந்தையை மேய்த்து இளைப்பாற செய்வேன் - எசே 34:15.
  • காணாமல் போனதை தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப் போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன் - எசே 34:16.
  • இஸ்ரயேல் மலைகளே! நீங்கள் உங்கள் கிளைகளைப் பரப்பி, என் மக்களுக்காய்க் கனிகளைச் சுமப்பீர்கள். ஏனெனில் அவர்கள் விரைந்து வந்துவிடுவர்; ஏனெனில் நான் உங்களுக்காய் இருக்கிறேன்; உங்களைக் கண்ணோக்குவேன். உங்கள் நாடு மீண்டும் உழப்பட்டு விதை விதைக்கப்படும் - எசே 36:8,9.
  • முன்னைய நன்னிலைக்கு கொண்டு வருவேன் - ஆமோ 9:14.
  • நாட்டில் வேரூன்ற செய்வேன். இனி ஒரு போதும் அவர்கள் பிடுங்கபடமாட்டார்கள் - ஆமோ 9:15.
  • அக்காலத்தில் உங்களை ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்து உங்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வருவேன்; ஆம், உங்கள் கண்முன்பாகவே உங்களை முன்னைய நன்னிலைக்கு உயர்த்தி, உலகின் எல்லா மக்களிடையேயும் நீங்கள் பெயரும் புகழும் பெறுமாறு செய்வேன் என்கிறார் ஆண்டவர் - செப் 3:20.
  • எனக்களித்திருந்த வாக்குறுதியை அவன் புறக்கணித்ததையும் என் உடன்படிக்கையை முறித்ததையும் அவன் தலைமேலேயே சுமத்துவேன் - எசே 17:19.
  • என் வலையை அவன் மீது வீச, அவன் என் கண்ணியில் சிக்குவான்; நான் அவனைப் பாபிலோனுக்குக் கொண்டு வந்து, எனக்கெதிராய் அவன் செய்த துரோகத்துக்காக அங்கே அவனுக்குத் தீர்ப்பு வழங்குவேன் - எசே 17:20.
  • அவர்கள் தொண்டை திறந்த பிணக்குழி, அவர்களது நாக்கு வஞ்சகமே பேசும்; அவர்கள் உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சு – உரோ 3:13.


  v. பாவ வழிகளை அடைத்து :

  • நான் அவள் வழியை முள்ளால் அடைப்பேன்; அவள் எதிரில் சுவர் ஒன்று எழுப்புவேன்; அவளால் வழி கண்டுபிடித்து போக இயலாது – ஓசே 2:6.
  • என் பெயரின் பொருட்டு என் சினத்தை அடக்கி கொள்கின்றேன்; என் புகழை முன்னிட்டு உன்னை வெட்டி வீழ்த்தாமல் உனக்காக அதை கட்டுப்படுத்துகிறேன் - எசா 48:9,2.
  • என் பொருட்டே என்னை முன்னிட்டே அதை செய்கிறேன். என் பெயரை எங்ஙனம் களங்கப்படுத்தலாம்; என் மாட்சியை நான் எவருக்கும் விட்டுக்கொடேன் - எசா 48:11.
  • நான் அழைத்திருக்கும் யாக்கோபை எனக்கு செவிகொடு – எசா 48:12.
  • நான் உன்மீது சினம் கொள்ள மாட்டேன். ஏனெனில் நான் பேரன்பு கொண்டவன்; நான் என்றென்றும் சினம் கொள்ளேன் - எரே 3:12,9.


 • திறக்கப்பட்ட இதயம்:
  • இவ்வார்ததைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும் - இ.ச. 6:6.
  • என் வார்த்தைகளை உங்கள் நெஞ்சிலும் நினைவிலும் நிறுத்துங்கள் - இ.ச. 11:18.
  • நீ வார்த்தையை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது - இ.ச. 30:14, உரோ 10:8.
  • உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன் - தி.பா 118:11.
  • கிறிஸ்துவை பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாக குடிகொள்வதாக – கொலோ 3:16.
  • கடவுளின் திருச்சட்டம் அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை – தி.பா 37:31.
  • என் கடவுளே! உம் திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது – தி.பா 40:8.
  • நான் கடவுளின் சட்டத்தை குறித்து உள்மார மகிழ்ச்சி அடைகிறேன் - உரோ 7:22.
  • பவுல் - 2கொரி 6:11-13.


 • மீட்பு:
  • கடவுள் என் உயிரை மீட்பது உறுதி; பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து என்னை தூக்கி நிறுத்துவார் - தி.பா 41:15.
  • இறந்து மண்ணில் உறங்குவோர் வாழ்வு பெறுவர் - தானி 12:2.
  • அவரே தம் இரக்கத்தினால் உங்களுக்கு உயிரையும், மூச்சையும் மீண்டும் கொடுப்பார் - 2மக் 7:23.
  • இறந்த உம் மக்கள் உயிர் பெறுவர்; உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும் - எசா 26:19.
  • நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன்; அங்கே வளமான மேய்ச்சல் நிலத்தில் அவை இளைப்பாறும் - எசே 34:14.
  • மலைகள் நிலைசாயினும் குன்றுகள் இடம்பெயரினும் உன்மீது நான் கொண்டுள்ள பேரன்பு நிலைசாயாது – எசா 54:10.
  • சாவு ஒழிந்தது; வெற்றி கிடைத்தது – 1கொரி 15:54.


 • கல்லறையும் விடுதலையும்:
  • இயேசுவின் கல்லறை – மத் 27:66.
  • இயேசுவின் உயிர்ப்பு – லூக் 24:1-12.
  • லாசரின் கல்லறை – யோவா 11:38-44.
  • எலிசாவின் கல்லறையில் இறந்தவர் உயிர்ப்பு – 2அர 13:20-21.
  • மோசேயின் கல்லறை - இ.ச. 34:6.
  • சிங்க குகையில் தானியேல் - தானி(இ) 3:31-42.
  • சூசன்னா – தானி(இ) 2:22-62.


 

 

 

 

My status 

உயிர்த்த இயேசு

சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.


மரித்த இயேசு உயிர்த்துவிட்டார். 

யூதா ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார். 


அஞ்சாதீர்கள்! நான் உலகை வென்றேன்.சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.உயிர்த்த இயேசு, சீடர்களை உறுதிப்படுத்தினார். 


மன்னாதி மன்னன் இயேசு, உயிர்த்தெழுந்தார். 


இயேசு உயிர்த்தார். இனி நாமும் உயிர்ப்போம்.சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார். 


இயேசு, கல்லறையில் இல்லை. 


அம்மா அழாதீர்! 


உயிர்த்த இயேசு மதலேன் மரியாளிடம். 


என் சீடருக்கு இதை அறிவிப்பீர். 


சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.சீடர்களின் விசுவாசத்தை, உறுதிப்படுத்தினார். 


உயிர்த்த இயேசு, சீடர்களை உறுதிப்படுத்தினார். 


விசுவாசம் அற்றவனாயிராதே. 


நான் தான் அஞ்சாதீர்கள்.சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார். 


திபேரியாக் கடலருகில், உயிர்த்த இயேசு 


பிள்ளைகளே! சாப்பிட வாருங்கள். 


சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.உயிர்த்த இயேசு, எம்மாவூஸ் சீடரோடு. 


உயிர்த்த இயேசு, மறைநூலை விளக்கினார் . 


சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.மாலை நேரம் ! எங்களோடு தங்கும். 


 
 
copyrights © 2012 catholicpentecostmission.in