இந்த எலும்புகள் உயிர்பெற முடியுமா ? எசே 37:3Rev.Fr.R.John Josephகிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !


 • உயிர் மூச்சை பெற்று ஜீவன் பெற்றான் மனிதன் - தொ.நூ 2:7.
  • அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான் - தொ.நூ 2:7.


 • ஆவிக்குரிய மனிதனுக்குள் தம் விருப்பத்தின் வழியாக வாழ்வையும் சாவையும் வைத்தார் கடவுள் - தொ.நூ 2:16,17.
  • ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், “தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம் - தொ.நூ 2:16.
  • ஆனால் நன்மை, தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டுச் சொன்னார் - தொ.நூ 2:17.


 • கடவுளின் விருப்பத்தின்படி வாழ்ந்தால் மனிதன் வாழ்வான். கடவுளின் விருப்பத்தின் படி வாழ தவறினால் சாவான் - தொ.நூ 2:17.

 • இந்த கட்டளை (விருப்பம்) மனிதனுக்கு சோதனையாக கொடுக்கப்பட்டது - இ.ச – 13:3, யோவா 14:15, வெளி 3:10, யாக் 1:12.
  • உங்கள் கடவுளாகிய ஆண்டவர் மீது நீங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அன்பு கூர்கின்றீர்களா என்று அவர் உங்களைச் சோதிக்கின்றார் - இ.ச. 13:3.
  • நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடிப்பீர்கள் - யோவா 14:15.
  • மனவுறுதி தரும் என் வாக்கை நீ கடைப்பிடித்ததால், மண்ணுலகில் வாழ்வோரைச் சோதிக்க உலகு அனைத்தின் மீதும் வரவிருக்கும் சோதனைக் காலத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன் - தி.வெ 3:10.
  • சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார்கள் - யாக் 1:12.


 • சோதனையில் வீழ்ந்தவன் எலும்பானான்

 • A. கடவுளை விட்டு விலகினான் - தொ.நூ 3:8

  • மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலாவிக் கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகினர் - தொ.நூ 3:8


  B. மரங்களிடையே ஒளிந்து கொண்டான் - தொ.நூ 3:8

  • மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலாவிக் கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர் - தொ.நூ 3:8.


  C. சபிக்கப்பட்டவனானான் - தொ.நூ 3:16-19

  • நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது - தொ.நூ 3:17.
  • முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும்; வயல்வெளிப் பயிர்களை நீ உண்பாய் - தொ.நூ 3:18.
  • நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய் என்றார் - தொ.நூ 3:19.


  D. இன்ப வனத்திலிருந்து துரத்தப்பட்டான் - தொ.நூ 3:23

  • ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பயன்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார் - தொநூ 3:23.
  • இவ்வாறாக அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார் - தொ.நூ 3:24.


  E. இன்ப வனத்திலிருந்து துரத்தப்பட்டான் - தொ.நூ 3:23

  • ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பயன்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார் - தொநூ 3:23.


  F. கடவுள் முன்னின்று மனிதன் மறைக்கப்படுகின்றான் - தொ.நூ 4:14

  • இன்று நீர் என்னை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கின்றீர்; உமது முன்னிலையினின்று நான் மறைக்கப்பட்டுள்ளேன். மண்ணுலகில் நான் நாடோடியாக அலைந்து திரிய வேண்டியுள்ளது. என்னை காண்கின்ற எவனும் என்னைக் கொல்வானே! என்றான் - தொ.நூ 4:14.


  G. கடவுள் தம் உயிர்மூச்சை எடுத்து விடுகிறார்; - தொ.நூ 6:3

  • ஆண்டவர், என் ஆவி தவறிழைக்கும் மனிதனில் என்றென்றும் தங்கப்போவதில்லை - தொ.நூ 6:3.


  H. வாழ்வின் வாசல் அடைக்கப்பட்டது – தொ.நூ 3:24

  • அவர் மனிதனை வெளியே துரத்தி விட்டார். ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே வாழ்வின் மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும் சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார் - தொ.நூ 3:24.
  • நான் கடந்து போகா வண்ணம் கடவுள் என் வழியை அடைத்தார்; என் பாதையை இருளாக்கினார் - யோபு 19:8.


  I. பாவம் வாசலில் படுத்து கிடக்கிறது – தொ.நூ 4:7

  • நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆள வேண்டும் என்றார் - தொ.நூ 4:7.


  J. பாவத்தின் விளைவால் சதை கிழிக்கப்பட்டு தானும் எலும்பாகி, பிறரையும் எலும்பாக மாற்றுகின்றான் - மீக் 3:2

  • நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையை நாடுகின்றீர்கள்; என் மக்களின் தோலை உயிரோட உரித்து, அவர்கள் எலும்புகளிலிருந்து சதையைக் கிழித்தெடுக்கின்றீர்கள் - மீக் 3:2.


 • சோதனை

 • A. கடவுள் சோதிக்கிறார் :

  i. கட்டளை கடைபிடிக்கிறீர்களா என்று அறிய

  • அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக் கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன் - வி.ப. 16:4.
  • ஆண்டவர் ஒரு மரத்துண்டைக் காட்டினார். அதை அவர் தண்ணீரில் எறிய, தண்ணீர் சுவைப்பெற்றது. அங்கே சட்டங்களையும் ஒழுங்குகளையும் தந்து ஆண்டவர் அவர்களைச் சோதித்தார் - வி.ப. 15:25.
  • அவர் உங்களை எளிவராக்கினார். அவர் தம் கட்டளைகளை நீங்கள் கடைபிடிப்பீர்களா, மாட்டீர்களா என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார் - இ.ச. 8:2.
  • ஆண்டவரது நெறிமுறையில் நடப்பதில் இஸ்ரயேலின் மூதாதையர் கவனமாக இருந்தது போல, இஸ்ரயேலரும் கவனமாக இருக்கின்றார்களா இல்லையா என இவர்களைக் கொண்டு நான் சோதிக்கின்றேன் என்றார் - நீ.தலை 2:22.
  • மோசே வழியாக இஸ்ரயேலரின் மூதாதையருக்கு ஆண்டவர் இட்ட கட்டளைகளுக்கு அவர்கள் கீழ்படிவார்களாக என்று சோதித்து அறியும் பொருட்டு அவர்கள் விடப்பட்டிருந்தனர் - நீ.தலை 3:4.


  ii. பாவம் செய்கிறீர்களா என்று அறிய – வி.ப. 20:20

  • மோசே மக்களை நோக்கி, “அஞ்சாதீர்கள்; கடவுள் மீது உங்களுக்கு ஏற்படும் அச்சத்தால் நீங்கள் பாவம் செய்யாதிருப்பீர்களா என்று உங்களைச் சோதித்தறியவே அவர் இவ்வாறு தோன்றினார் என்றார் - வி.ப. 20:20.


  iii. அன்பு செய்கிறீர்களா என்று அறிய – இ.ச. 13:3

  • உங்கள் கடவுளாகிய ஆண்டவர் மீது நீங்கள் முழு இருதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அன்பு கூர்கின்றீர்களோ என்று அவர் உங்களைச் சோதிக்கின்றார் - இ.ச. 13:3.


  iv. இறுதியில் நன்மை செய்ய - இ.ச. 8:16

  • உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்; இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக உங்களை எளியவராக்கிச் சிறுமைப்படுத்திச் சோதித்தவரும் அவரே - இ.ச. 8:16.


  B. துன்ப சோதனை :

  • சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார்கள் - யாக் 1:12.

  பேதுரு :

  • சீமோனே, சீமோனே இதோ கோதுமையைப் போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான் - லூக் 22:31.
  • வீழ்ச்சி – பேதுரு இயேசுவை மறுதலித்தல் - மத் 26:69-75

  C. பாவசோதனை :

  • ஆதாம் ஏவாள் - இன்பவனத்தில் - தொ.நூ 3:14-20. ஆதாம் ஏவாள் - கட்டளை மீறினர் - வாழ்வை இழந்தனர்.
  • யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான் - மத் 22:47-48. தூக்கு போட்டான் - மத் 27:5.
  • அனனியா சப்பிராவை சாத்தான் ஆட்கொள்ள ஆவியானவரை ஏமாற்றினர் - தி.தூ 5:3. இறந்தனர் - தி.தூ 5:1-10.


 • சோதனையில் வீழ்ந்து பள்ளத்தாக்கில் கிடக்கும் எலும்பான மனிதன்

  • தாழ்த்தப்பட்ட நீ தரையிலிருந்து பேசுவாய்; நலிந்த உன் குரல்! புழுதியிலிருந்து எழும்பும்; உன் குரல் இறந்தவன் ஆவியின் ஒலிபோல, மண்ணிலிருந்து வெளிவரும்; உன் பேச்சு புழுதிக்குள்ளிருந்து முணுமுணுக்கும் - எசா 29:4.
  • ஏனெனில், என் மக்கள் இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள். பொங்கி வழிந்தோடும் நீரூற்றாகிய என்னை புறக்கணித்தார்கள். தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைத் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள் - எரே 2:13.
  • முற்றிலும் நல்ல கிளையினின்று உயர் இனத் திராட்சைச் செடியாய் உன்னை நட்டு வைத்தேன். நீ கெட்டுபோய்த் தரங்கெட்ட காட்டுத் திராட்சைச் செடியாய் மாறியது எப்படி? – எரே 2:21.
  • உன்னை உருவாக்கிய ஆண்டவரை நீ ஏன் மறந்துவிட்டாய்? வானங்களை விரித்து பரப்பியவரும், மண்ணுலகிற்கு அடித்தளமிட்டவரும் அவர் அன்றே? உன்னை ஒடுக்கி அழித்துவிட முயன்றவன் சீற்றத்தை முன்னிட்டு நீ ஏன் எந்நாளும் ஓய்வின்றி நடுங்குகிறாய்? உன்னை ஒடுக்கியவனின் சினம் எங்கே? – எசா 51:13.
  • என்றென்றும் அவர் சினம் அடைவாரோ? இறுதிவரை அவர் சினம் கொண்டிருப்பாரோ? என்கிறாய். இவ்வாறு சொல்லிவிடு உன்னால் இயன்றவரை தீச்செயல்களையே செய்கிறாய் - எரே 3:5.
  • உன் தீச்செயலே உன்னை தண்டிக்கும். உன் பற்றுறுதியின்மையே உன்னைக் கண்டிக்கும்; உன் கடவுளாகிய ஆண்டவராம் என்னைப் புறக்கணித்து தீயது எனவும் கசப்பானது எனவும் கண்டுணர்ந்து கொள் - எரே 2:19.
  • ஆண்டவர் கூறுவது இதுவே. என்னை விட்டகன்று வீணானவற்றைப் பின்பற்றி வீணாகும் அளவுக்கு உங்கள் தந்தையர் என்னிடம் என்ன தவறுகண்டனர்? – எரே 2:5.
  • இருவகைத் தீங்குகள் உனக்கு நேரிட்டன. உனக்காகப் புலம்பியழுபவன் எவன்? வீழ்ச்சி – அழிவு, பஞ்சம் - வாள் இவை உன்னை வாட்டின; யார் உன்னைத் தேற்றுவார்? – எசாயா 51:19.


 • பிசாசுக்கு பணிந்த எலும்பான மனிதன்

  • அதற்கு இயேசு, பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் - யோவா 8:34.
  • சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம். தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி. அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை. அவன் பொய்பேசும் போதும் அது அவனுக்கு இயல்பாக இருக்கிறது. ஏனெனில் அவன் பொய்யன். பொய்மையின் பிறப்பிடம் - யோவா 8:44.
  • ஏனென்றால் இவர்களுள் சிலர் ஏற்கனவே நெறிதவறிச் சாத்தானுக்குப் பின் சென்றுவிட்டார்கள் - 1திமொ 5:15.
  • அலகையின் விருப்பத்திற்கேற்ப அதன் பிடியில் வாழும் அவர்கள் அதன் கண்ணிக்குத் தப்பி மனத்தெளிவு பெறக்கூடும் - 2திமொ 2:26.
  • அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே – பிலி 3:19.
  • கடவுளின் நல்ல வார்த்தையையும் வரவிருக்கும் உலகின் வல்லமையையும் சுவைத்த இவர்கள் நெறி பிறழ்ந்து விடின், இவர்களை மனம் மாற்றி, மீண்டும் புத்துணர்வு பெறச் செய்வது அரிது. ஏனெனில், இவர்கள் இறைமகனைத் தாங்களே சிலுவையில் அறைந்து, வெளிப்படையாக இழிவுபடுத்துகிறவர்கள் ஆவர் - எபி 6:6.
  • அப்பொழுது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர்கெட்டிருந்தது; பூவுலகு வன்முறையால் நிறைந்திருந்தது – தொ.நூ 6:11.


 • கடவுளால் கைவிடப்பட்ட எலும்பான மனிதன்

  • கடவுளை அறிந்து ஏற்றுக்கொள்ளும் தகுதியை அவர்கள் இழந்து விட்டதால் சீர்கெட்ட சிந்தனையின் விளைவாகத் தகாத செயல்களைச் செய்யுமாறு கடவுள் அவர்களை விட்டுவிட்டார் - உரோ 1:28.
  • அவர்கள் கடவுளைப் பற்றிய உண்மைக்குப் பதிலாகப் பொய்மையை ஏற்றுக்கொண்டார்கள்; படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்குப் பணி செய்தார்கள்; படைத்தவரை மறந்தார்கள்; அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர் ஆமென் - உரோ 1:25.
  • ஆகையால் கடவுள், கட்டுக்கடங்காத இழிவான பாலுணர்வு கொள்ள அவர்களை விட்டுவிட்டார். அதன் விளைவாக, அவர்களுடைய பெண்கள் இயல்பான இன்ப முறைக்குப் பதிலாக இயல்புக்கு மாறான முறையில் நடந்துகொண்டார்கள் - உரோ 1:26.
  • ஆகவே, அவர்களுடைய உள்ளத்தின் இச்சைகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்துகின்ற ஒழுக்கக் கேடான செயல்களைச் செய்யும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார் - உரோ 1:24.
  • இவ்வாறு, அவர்கள் எல்லா வகை நெறிகேடுகளும், பொல்லாங்கு, பேராசை, தீமை ஆகியவையும் நிறைந்தவர்களானார்கள். அவர்களிடம் பொறாமை, கொலை, சண்டைச் சச்சரவு, வஞ்சகம், தீவினை முதலியவை மலிந்துவிட்டன. அவர்கள் புறங்கூறுபவர்கள் - உரோ 1:29.


 • எலும்பான வாழ்வு

  • தாங்கிய கருப்பையே அவர்களை மறக்கும்@ புழு அவர்களைச் சுவைத்துத் தின்னும். அவர்கள் கொடுமை மரம்போல் முறிந்து போம் - யோபு 24:20.
  • என் மனைவிக்கு என் மூச்சு வீச்சம் ஆயிற்று; என் தாயின் பிள்ளைகளுக்கு நாற்றம் ஆனேன் - யோபு 19:17.
  • என் தோல் கருகி உரிகின்றது; என் எலும்புகள் வெப்பத்தால் தீய்கின்றன – யோபு 30:30.
  • அவர் என் சதையையும் தோலையும் சிதைத்து விட்டார்! என் எலும்புகளை நொறுக்கி விட்டார்! – புல 3:4.


 • சேமிப்பு

  • பாவம் செய்கிறவருக்கோ செல்வத்தைச் சேர்த்து வைக்கும் வேலையைக் கொடுக்கிறார்; ஆனால், அச்செல்வம் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு விட்டுச் செல்வதற்கே. - ச.உ. 2:26.
  • கடவுளின் சினமும் நீதித் தீர்ப்பும் வெளிப்பட வேண்டிய நாளில் உங்களுக்கு வரப்போகும் தண்டனையைச் சேமித்து வைக்கிறீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார் - உரோ 2:5,6.
  • ஆனால் தன்னலம் நாடுபவர்களாய் உண்மைக்குப் பணியாமல், அநீதிக்குப் பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும் சீற்றமும் வந்துவிழும் - உரோ 2:8.
  • இறைப்பற்று இல்லாத மனிதர்களின் எல்லா வகையான நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது. ஏனெனில், இவர்கள் தங்கள் நெறிகேட்டினால் உண்மையை ஒடுக்கி விடுகின்றார்கள் - உரோ 1:18.
  • இப்படியெல்லாம் நடப்பவர்கள் சாவுக்குரியவர்கள் என்னும் கடவுளின் ஒழுங்கை அறிந்திருந்தும் இவ்வாறு நடத்துகின்றார்கள்; தாங்கள் நடப்பது மட்டுமன்று, அப்படி நடப்பவர்களையும் பாராட்;டுகிறார்கள் - உரோ 1:32.
  • பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு; மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு – உரோ 6:23.


 • இந்த எலும்பு கூட்டங்கள் உயிர்பெறுமா?

 • 'உயிர்பெறும்'

  • இறந்த உம்மக்கள் உயிர் பெற்றவர்; அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும் - எசா 26:19.
  • நானே இருக்கிறவர்! என்னைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்பதை இப்பொழுது உணர்ந்து கொள்ளுங்கள்! கொல்பவரும் நானே! உயிரளிப்பவரும் நானே! காயப்படுத்துபவரும் நானே! குணமாக்குபவரும் நானே! என் கைகளிலிருந்து விடுவிப்பார் எவரும் இரார் - இ.ச. 32:39.
  • ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகிறார்; பாதாளத்தில் தள்ளுகிறார்; உயர்த்துகின்றார் - 1சாமு 2:6.
  • கூனிக் குறுகியவன் விரைவில் விடுதலை பெறுவான்; அவன் குழியில் செத்து வீழ்வதில்லை; அவனுக்கு உணவு இல்லாமல் போகாது – எசா 51:14.


 • தாவீதின் வீழந்த நிலை

 • பெத்சபே முன் - 2சாமு 12:9

  • ஏனெனில், உமது சினத்திற்கும் சீற்றத்திற்கும் உள்ளானேன்; நீர் என்னைத் தூக்கி எறிந்துவிட்டீர் - தி.பா 102:10.
  • மாலை நிழலைப் போன்றது எனது வாழ்நாள்; புல்லென நான் உலர்ந்து போகின்றேன் - தி.பா 102:11.
  • என் வாழ்க்கை பாதையின் நடுவில் ஆண்டவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்; அவர் என் ஆயுளைக் குறுக்கிவிட்டார் - தி.பா 102:23.
  • சாவின் கயிறுகள் என்னை இறுக்கின; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன. பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன – தி.பா 18:4,5.


 

My status 

உயிர்த்த இயேசு

சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.


மரித்த இயேசு உயிர்த்துவிட்டார். 

யூதா ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார். 


அஞ்சாதீர்கள்! நான் உலகை வென்றேன்.சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.உயிர்த்த இயேசு, சீடர்களை உறுதிப்படுத்தினார். 


மன்னாதி மன்னன் இயேசு, உயிர்த்தெழுந்தார். 


இயேசு உயிர்த்தார். இனி நாமும் உயிர்ப்போம்.சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார். 


இயேசு, கல்லறையில் இல்லை. 


அம்மா அழாதீர்! 


உயிர்த்த இயேசு மதலேன் மரியாளிடம். 


என் சீடருக்கு இதை அறிவிப்பீர். 


சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.சீடர்களின் விசுவாசத்தை, உறுதிப்படுத்தினார். 


உயிர்த்த இயேசு, சீடர்களை உறுதிப்படுத்தினார். 


விசுவாசம் அற்றவனாயிராதே. 


நான் தான் அஞ்சாதீர்கள்.சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார். 


திபேரியாக் கடலருகில், உயிர்த்த இயேசு 


பிள்ளைகளே! சாப்பிட வாருங்கள். 


சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.உயிர்த்த இயேசு, எம்மாவூஸ் சீடரோடு. 


உயிர்த்த இயேசு, மறைநூலை விளக்கினார் . 


சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.மாலை நேரம் ! எங்களோடு தங்கும். 


உயிர்த்த இயேசு, வயல்வெளியில் தோன்றினார். 


சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.


 


திபேரியாக் கடலருகில், உயிர்த்த இயேசு 


பிள்ளைகளே! சாப்பிட வாருங்கள். 


சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.
 
 
copyrights © 2012 catholicpentecostmission.in