உங்களுக்குள் உயிர் மூச்சு புக செய்வேன் எசே 37:10Rev.Fr.R.John Josephகிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !


 • உயிர்மூச்சு புக செய்வேன் :
  • உலர்ந்த எலும்புகளுக்குள் உயிர்மூச்சு புக செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள் - எசே 37:5-7,14.
  • இஸ்ரயேல் வீட்டார் மீது என் ஆவியை பொழிவேன் - எசே 39:29.
  • இதோ என்; ஊழியர், அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன் - எசா 42:1.
  • மாந்தர் யாவர் மேலும் என் ஆவியை பொழிந்தருள்வேன் - யோவே 2:28,29.


 • நீங்களும் உயிர் பெறுவீர்கள் :
  • கடவுள் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர்மூச்சு ஊத மனிதன் உயிருள்ளவன் ஆனான் - தொ.நூ 2:7.
  • தூயஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும் - உரோ 8:10.
  • தூய ஆவியார், சாவுக்குரிய உங்கள் உடல்களை உயிர்பெற செய்வார் - உரோ 8:11.
  • கடவுளிடமிருந்து வந்த உயிர்மூச்சு அவற்றுள் நுழைந்ததும் அவர்கள் எழுந்து நின்றார்கள் - வெளி 11:11.
  • பின்னர் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்க செய்தது – எசே 3:24.


 • வாழ்வு :
  • எலும்பு கூட்டங்கள் உயிர்பெற்று காலூன்றி, மாபெரும் படைத்திரள் போல் நின்றனர் - எசே 37:10.
  • மீண்டும் உன்னதத்திலிருந்து ஆவி நம்மேல் பொழியப்படும்; நீதி பாலைநிலத்தில் குடிக்கொண்டிருக்கும்; நேர்மை வளமான வயல்களில் வாழும். நேர்மையால் வரும் பயன் நல்வாழ்வு; நீதியால் விளைவன என்றுமுள அமைதியும் நம்பிக்கையும் - எசே 32:15-18.
  • வாழ்வு தருவது தூய ஆவியே – யோவா 6:63.
  • தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்கு துணை நிற்கிறார் - உரோ 8:26.
  • எல்லாம் வல்லவரின் மூச்சு என்னை வாழ்விக்கிறது – யோபு 33:4.
  • கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல் ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம் “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம் - உரோ 8:9,15.


 • விடுதலை அளிக்கும் ஆவி :
  • இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார் - லூக் 4:14.
  • ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என் மேல் உள்ளது – எசா 61:1-11.
  • நான் தேர்ந்து கொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும் இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன் - எசா 42:1,7.
  • ஆவியானவர் இருக்கும் இடத்தில் விடுதலை உண்டு – 2கொரி 3:17.
  • பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார் - லூக் 5:17.
  • உனது ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல, ஆனால் எனது ஆவியாலே ஆகும். என்கிறார் படைகளின் ஆண்டவர். இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார் - செக் 4:6, லூக் 9:1.


சம்பவம்


 • சீடர்கள் :
  • பயந்து அறைக்குள் இருந்த சீடர்கள் தூய ஆவியால் துணிவு பெற்றனர் - தி.தூ 4:29-31.
  • தீச்சூளையில் 3 இளைஞர்கள் மீட்க ஆவியானவர் இறங்கி வந்தார் - தானி(இ) 1:26,27.


 • பவுல், சீலா :
  • பவுலும் சீலாவும் சிறையில் இருந்த போது, ஆவியானவர் சிறைகூடத்தை அசைத்தார் - தி.தூ 16:24-26.


 • கிதியோன் :
  • மிதியானியருக்கு பயந்து ஒளிந்து கொள்ள திட்டமிட்ட கிதியோனை ஆண்டவரின் ஆவி ஆட்கொண்டது – நீ.த 6:11-34.
  • பின்பு ஆண்டவரின் தூதர் ஒபிராவில் உள்ள ஒரு கருவாலி மரத்தடியில் வந்து அமர்ந்தார். அந்த மரம் அபியேசர் குடும்பத்தவரான யோவாசுக்குச் சொந்தமானது. அவர் மகன் கிதியோன், மிதியானியரிடமிருந்து கோதுமையை மறைப்பதற்காக, திராட்சை ஆலையில் கதிர்களை அடித்துக்கொண்டிருந்தார் - நீ.த 6:11.
  • எல்லா மிதியானியரும் அமலேக்கியரும் கிழக்கில் வாழும் மக்களும் ஒன்றுகூடி யோர்தானைக் கடந்து இஸ்ரயேல் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கினர் - நீ.த 6:33.
  • ஆண்டவரின் ஆவி கிதியோனை ஆட்கொண்டது. அவர் எக்காளம் ஊதி, அபியேசர் குடும்பத்தவரைத் தம்மைப் பின்பற்றி வருமாறு அழைத்தார் - நீ.த 6:34.


 • சிம்சோன் :
  • ஆண்டவரின் ஆவி ஆற்றலுடன் அவர் மீது இறங்கியது – நீ.த 14:19.
  • ஆண்டவர் அவரிடமிருந்து அகன்றுவிட்டார் - நீ.த 16:20.
  • இந்த ஒரு முறைமட்டும் எனக்கு ஆற்றல் அளியும் - நீ.த 16:28.
  • முழு வலிமையுடன் வீட்டின் தூண்களை சாய்த்தார் - நீ.த 16:29,30.


 • தானியேல் : தானி(இ) 2:42-46.
  • சூசன்னாவுக்கு நீதி வழங்க தானியேலிடம் தூய ஆவியை கடவுள் தூண்டிவிட்டார் - தானி (இ) 2:45


 • எசேக்கியேல் : எசே 3:11-14.
  • நானோ மனம் கசந்து சினமுற்று சென்றேன். ஆனால் ஆண்டவரது ஆற்றல்மிகு கைவன்மை என்மேல் இருந்தது – எசே 3:14.
  • பின்னர், ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்க செய்தது – எசே 3:24.


 • சிங்க குகையில் :
  • ஆண்டவரின் தூதர் அவருடைய உச்சந்தலையைப் பிடித்துத் தூக்கி, காற்றினும் விரைந்து சென்று பாபிலோனில் சிங்கக்குகைக்கு மேலேயே இறக்கிவிட்டார் - தானி(இ) 3:36,37,39.


 

 

 

 

My status 

உயிர்த்த இயேசு

சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.


மரித்த இயேசு உயிர்த்துவிட்டார்.


 

யூதா ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார். 


அஞ்சாதீர்கள்! நான் உலகை வென்றேன்.
உயிர்த்த இயேசு, சீடர்களை உறுதிப்படுத்தினார். 


மன்னாதி மன்னன் இயேசு, உயிர்த்தெழுந்தார். 


இயேசு உயிர்த்தார். இனி நாமும் உயிர்ப்போம். 


இயேசு, கல்லறையில் இல்லை. 


அம்மா அழாதீர்! 


உயிர்த்த இயேசு மதலேன் மரியாளிடம். 


என் சீடருக்கு இதை அறிவிப்பீர்.


 


சீடர்களின் விசுவாசத்தை, உறுதிப்படுத்தினார்.


 

 
 
copyrights © 2012 catholicpentecostmission.in