துணிவுடன் எழுந்து வாRev.Fr.R.John Josephகிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !


 • விழுந்த இடத்திலிருந்து வாழ்வுக்கு வாழ்வு எழுந்து வா :
  • நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டியது. ஆண்டவர் கூறுவது இதுவே; விழுந்தவன் எழுவதில்லையா? பிரிந்து சென்றவன் திரும்பி வருவதில்லையா? – எரே 8:4.
  • ஏன் இந்த எருசலேமின் மக்கள் என்றென்றைக்கும் என்னைவிட்டு விலகிப் பொய்யைப் பற்றிக்கொண்டு நிற்கின்றார்கள்? ஏன் திரும்பி வர மறுக்கின்றார்கள்? – எரே 8:5.
  • இவை அனைத்தையும் செய்தபின் என்னிடம் திரும்பி வருவாள் என எண்ணினேன். அவளோ திரும்பி வரவில்லை. நம்பிக்கைத் துரோகம் செய்த சகோதரி யூதா இதைக் கண்டாள் - எரே 3:7.
  • நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்து விட்டாய் என்பதை நினைத்து பார். மனம் மாறு; முதலில் நீ செய்து வந்த செயலை இப்பொழுதும் செய்; நீ மனமாற தவறினால் நான் உன்னிடம் வந்து உனது விளக்குத்தண்டை அது இருக்கும் இடத்திலிருந்து அகற்றிவிடுவேன் - வெளி 2:5.
  • இவை அனைத்திற்கும் பிறகு அவளுடைய சகோதரி யூதா முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பி வரவில்லை; பொய் வேடம் போடுகிறாள் என்கிறார் ஆண்டவர் - எரே 3:10.
  • இத்தலைமுறையினரே! ஆண்டவர், வாக்கை கவனியுங்கள். நான் இஸ்ரயேலுக்குப் பாலைநிலமாய் இருந்தேனா? அல்லது இருள்சூழ் நிலமாய் இருந்தேனா? நாங்கள் விருப்பம் போல் சுற்றித் திரிவோம். இனி உம்மிடம் வரமாட்டோம் என்று என் மக்கள் ஏன் கூறினார்கள்? – எரே 2:31.
  • ஒரு கன்னிப்பெண் தன் நகைகளை மறப்பாளோ? மணப்பெண் தன் திருமண உடையை மறப்பதுண்டோ? என் மக்களோ என்னை எண்ணிறந்த நாள்களாய் மறந்து விட்டார்கள் - எரே 2:32.
  • நல்லவர் ஏழு முறை விழுந்தாலும் எழுந்து நிற்பார்; பொல்லார் துன்பம் வந்தவுடன் விழுந்துவிடுவர் - நீ.மொ 24:16.
  • நான் வீழ்ச்சியுற்றாலும் எழுச்சி பெறுவேன். நான் இருளில் குடியிருந்தாலும் ஆண்டவர் எனக்கு ஒளியாய் இருப்பார் - மீக் 7:8.


 • பாவத்திலிருந்து மீட்புக்கு எழுந்து வா :
  • இஸ்ரயேலே, நான் உன்னை மறக்கமாட்டேன். உன் குற்றங்களை கார்மேகம் போலும் உன் பாவங்களை பனிபடலம் போலும் அகற்றிவிட்டேன். என்னிடம் திரும்பி வா. நான் உனக்கு மீட்பளித்து விட்டேன் - எசா 44:22.


 • தீயவழிவிட்டு கடவுளின் வழியில் எழுந்து வா :
  • நல்லவழி எது என்று கேளுங்கள். அந்த வழியில் செல்லுங்கள். அப்போது உங்களுக்கு அமைதி கிடைக்கும் - எரே 6:16.
  • நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்? – மீக் 6:8.
  • இஸ்ரயேலே! உன் கடவுளிடம் திரும்பி வா; இரக்கத்தையும் நீதியையும் கடைபிடி; எப்போதும் உன் கடவுளை நம்பிக்காத்திரு – ஓசே 12:6.


 • உலக மாயையிலிருந்து உண்மை வாழ்வுக்கு எழுந்து வா :
  • விழித்தெழு, விழித்தெழு ஆண்டவர் கையினின்று சினக்கிண்ணத்தைக் குடித்தவளே, மதியை மயக்கும் அக்கிண்ணத்தை அடிமண்டிவரை குடித்தவளே, எருசலேமே எழுந்து நில் - எசா 51:17.
  • இதோ உன்னை மதிமயக்கும் கிண்ணத்தை உன் கையினின்றும் அகற்றிவிட்டேன். என் சினக் கிண்ணத்தினின்று நீ இனி குடிக்கவே மாட்டாய் - எசா 51:22.
  • விழித்தெழு, விழித்தெழு சீயோனே, உன் ஆற்றலை அணிந்து கொள் - எசா 52:1.
  • சிறைப்பட்ட எருசலேமே, புழுதியைத் தட்டிவிட்டு எழுந்து நில்; அடிமையாக்கப்பட்ட மகள் சீயோனே, உன் கழுத்திலுள்ள கட்டுக்களை அவிழ்த்து விடு – எசா 52:2.


 • இருளிலிருந்து எழுந்து ஒளி வீசு :
  • எழு, ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது – எசா 60:1.


 • சோம்பல் நீங்கி துணிவு கொள்ள எழுந்து வா :
  • நான் உனக்கு கட்டளையிடவில்லையா? வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே. நான் நீ செல்லும் இடமெல்லாம் உன்னோடு இருப்பேன் - யோசு 1:9.


 • உலகிலிருந்து எழுந்து கடவுளிடம் வா :
  • புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்கு செல்வோம். யாக்கோபின் கடவுளின் கோவிலுக்கு போவோம். அவர் தம் வழிகளை நமக்கு கற்பிப்பார். நாமும் அவர் நெறிகளில் நடப்போம் - மீக் 4:2, எசா 2:3.
  • யாக்கோபின் குடும்பத்தாரே வாருங்கள். நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம் - எசா 2:5.
  • வாருங்கள், மறக்கப்படாத என்றுமுள உடன்படிக்கை மூலம் ஆண்டவரோடு நம்மையே இணைத்துக் கொள்வோம் - எரே 50:5.


 • வாழும் நாட்டிலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு எழுந்து வா :
  • திடமும் உறுதியும் கொண்டு, என் ஊழியன் மோசே கட்டளையிட்ட எல்லா சட்டங்களையும் கடைபிடிப்பதில் கவனமாயிரு. நீ செல்லும் வழியெல்லாம் வெற்றி பெறுவாய் - யோசு 1:7.
  • வீறுகொள், துணிந்துநில், வாக்களித்த நாட்டை உரிமையாக்கி கொள்ளுமாறு செய்வாய் - யோசு 1:6.


 • வலுவின்மையிலிருந்து வலிமைக்கு எழுந்து வா :
  • மகள் சீயோனே எழுந்திடு, உன் கொம்பை இரும்பாக மாற்றுவேன். மக்களினங்களை நீ நொறுக்குவாய். கொள்ளைப் பொருள்களை ஆண்டவரிடம் அர்ப்பணிப்பாய் - மீக் 4:13.


 • நற்செய்தி அறிவிக்க எழுந்து வா :
  • சீயோனே! நற்செய்தி தருபவளே! உயர் மலைமேல் நின்றுகொள். எருசலேமே நற்செய்தி அறிவிப்பவளே உன் குரலை எழுப்பு அஞ்சாதே – எசா 40:9.


சம்பவம்


1. சோர்வை அகற்றி இயேசுவிடம் எழுந்து வா

 • மரியாள் :
  • மார்த்தாள், மரியாவிடம் போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார் என்று காதோடு காதாய் சொன்னார்; இதை கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார் - யோவா 11:28,29.


2. மரண பயத்திலிருந்து எழுந்து வா


 • எலியா எழுந்து சாப்பிடு :
  • வானதூதர் எலியாவை தட்டி எழுப்பி, எழுந்து சாப்பிடு, என்றார் - 1அர 19:5.
  • ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, எழுந்து சாப்பிடு; ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும் - 1அர 19:7.

 • தானியேல் எழுந்து சாப்பிடு :
  • தானியேல் கடவுள் உமக்கு அனுப்பியுள்ள உணவை உண்ணும் - தானி(இ) 3:37.


3. இருளான வாழ்விலிருந்து எழுந்து ஒளியில் வா


 • பார்த்திமேயு :
  • பார்த்திமேயுவைக் கூப்பிட்டு, துணிவுடன் எழுந்து வாரும். இயேசு உம்மை கூப்பிடுகிறார் - மாற் 10:49.
  • அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார் - மாற் 10:50.


4. படுக்கையிலிருந்து எழுந்து வா


 • 38 – வருட நோயாளி :
  • என்னை குளத்தில் இறக்கி விட ஆள் இல்லை – யோவா 5:7.
  • எழுந்து உம் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும் - யோவா 5:8.
  • உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக்கெண்டு நடந்தார் - யோவா 5:9.

 • முடக்குவாதமுற்றவரிடம் :
  • நீ எழுந்து உன் கட்டிலை தூக்கிக் கொண்டு வீட்டுக்குபோ – மத் 9:6.
  • அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார் - மத் 9:7.


5. சாவினின்று வாழ்வுக்கு எழுந்து வா


 • சிறுமி :
  • கையை பிடித்து, சிறுமியே எழுந்திடு என்று கூப்பிட்டார். உயிர்மூச்சு திரும்பி வரவே, உடனே அவள் எழுந்தாள் - லூக் 9:55.


6. பன்றிகுழியிலிருந்து எழுந்து தந்தையிடம் வா


 • இளையமகன் :
  • நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், “அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்” - லூக் 15:18.
  • “உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார்” - லூக் 15:20.


7. கன்னியர் - மணமகனை எதிர்கொள்ள


 • கன்னியர் :
  • மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர் - மத் 25:7.


8. கடவுளின் எதிரிகளை வீழ்த்த எழுந்து வா


 • தெபோரா :
  • தெபோரா பாராக்கிடம், எழுந்திடும்; இந்நாளில் ஆண்டவர் சீசராவை உம்மிடம் ஒப்படைப்பார். ஆண்டவர் உம்முன் செல்லவில்லையா? – நீ.தலை 4:14.
  • எழுந்திடு தெபோரா எழுந்திடு. பாடல் ஒன்று பாடு. உன் கைதிகளை இழுத்து சென்றிடு – நீ.த 5:12.
  • வானிலிருந்து விண்மீன்கள் போரிட்டன. தங்கள் பாதையிலிருந்து சீசராவுடன் போரிட்டன. என் உயிரே! வலிமையுடன் பீடு நடை போடு – நீ.தலை 5:20,21.

 • கிதியோன் :
  • உன்னுடைய இதே ஆற்றலுடன் செல்வாய். மிதியானியர் கையினின்று இஸ்ரயேலை நீ விடுவிப்பாய். உன்னை அனுப்புவது நானல்லவா – நீ.தலை 6:14.
  • நான் உன்னோடு இருப்பதால் நீ தனி ஆளாக மிதியானியரை வெல்வாய் - நீ.தலை 6:16.


9. கடவுளின் விருப்பம் நிறைவேற்ற நீ துணிவுடன் வா


 • எரேமியா :
  • நீயோ, உன் இடையை வரிந்து கட்டிக்கொள்; புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல்; அவர்கள் முன் கலக்கமுறாதே – எரே 1:17.
  • அவர்கள் உனக்கெதிராய் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றிக்கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன் - எரே 1:19.
  • என் வாக்கை செயலாக்க நானும் விழிப்பாயிருப்பேன் - எரே 1:12.
  • சிறுப்பிள்ளை நான் என்று சொல்லாதே; யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல். எவற்றை எல்லாம் சொல்ல கட்டளையிடுகிறேனோ அவற்றைச் சொல் - எரே 1:7.

10. பாரம்பரிய வாழ்விலிருந்து ஆவிக்குரிய வாழ்வுக்கு எழுந்து வா


 • பவுல் :
  • புறப்படு தொலையிலுள்ள பிற இனத்தவரிடம் நான் உன்னை அனுப்புகிறேன் - தி.தூ 22:21.
  • இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, “அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு, நிறுத்தாதே” – தி.தூ 18:9.
  • ஏனெனில் நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்கு தீங்கிழைக்கப் போவதில்லை. இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர் என்று சொன்னார் - தி.தூ 18:10
  • துணிவோடிரும். எருசலேமில் என்னைப்பற்றி சான்று பகர்ந்தது போல உரோமையிலும் சான்று பகர வேண்டும் - தி.தூ 23:11.

துணிச்சல் :

 • இப்போதும் தூய ஆவியாருக்குக் கட்டுப்பட்டு நான் எருசலேமுக்குச் செல்கிறேன். அங்கு எனக்கு என்ன நேரிடுமென்பது தெரியாது – தி.தூ 20:22.
 • சிறைவாழ்வும் இனனல்களும் எனக்காகக் காத்திருக்கின்றன என்று தூயஆவியார் ஒவ்வொரு நகரிலும் என்னை எச்சரித்து வருகிறார் - தி.தூ 20:23.
 • என்னை பொறுத்த வரையில் எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை. இறையருளைப் பற்றிய நற்செய்திக்கு சான்று கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம் - தி.தூ 20:24.
 • அதற்கு பவுல் மறுமொழியாக நான் ஆண்டவர் இயேசுவின் பெயருக்காக எருசலேமில் கட்டப்படுவதற்கு மட்டுமல்ல, சாவதற்கும் தயார் என்றார் - தி.தூ 21:13. 

 

 

 

My status 

உயிர்த்த இயேசு

சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.


மரித்த இயேசு உயிர்த்துவிட்டார். 

யூதா ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார். 


அஞ்சாதீர்கள்! நான் உலகை வென்றேன்.சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.உயிர்த்த இயேசு, சீடர்களை உறுதிப்படுத்தினார். 


மன்னாதி மன்னன் இயேசு, உயிர்த்தெழுந்தார். 


இயேசு உயிர்த்தார். இனி நாமும் உயிர்ப்போம்.சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார். 


இயேசு, கல்லறையில் இல்லை. 


அம்மா அழாதீர்! 


உயிர்த்த இயேசு மதலேன் மரியாளிடம். 


என் சீடருக்கு இதை அறிவிப்பீர். 


சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.சீடர்களின் விசுவாசத்தை, உறுதிப்படுத்தினார். 


உயிர்த்த இயேசு, சீடர்களை உறுதிப்படுத்தினார். 


விசுவாசம் அற்றவனாயிராதே. 


நான் தான் அஞ்சாதீர்கள்.சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார். 


திபேரியாக் கடலருகில், உயிர்த்த இயேசு 


பிள்ளைகளே! சாப்பிட வாருங்கள். 


சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.உயிர்த்த இயேசு, எம்மாவூஸ் சீடரோடு. 


உயிர்த்த இயேசு, மறைநூலை விளக்கினார் . 
 
copyrights © 2012 catholicpentecostmission.in