"ஆவிக்குரிய திருச்சபை"Rev.Fr.R.John Joseph
"PART-I.பைபிளில் திருச்சபை"


“I. கடவுளின் அனாதி திட்டத்தில் திருச்சபை”


தாம் தேர்ந்து கொண்ட மக்களை ஒரு சபையாக கூட்டி, தன் சட்டங்களையும், நியமங்களையும் அவர்கள் கடைபிடிக்கச் சொல்லி, அவர்களை நித்தியத்துக்கும் மீட்பது, கடவுளின் அனாதி திட்டம் - எபே 1:10

“காலநிறைவில், விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்துமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறை பொருள்” – எபே 1:10.


“II.இத்திட்டத்தின் படிப்படியான வளர்ச்சி”


“இறை மக்களை” சபையாக உருவாக்கும் கடவுளின் இந்த திட்டம், வேதத்தில் சிறிது சிறிதாக பரிணாமித்து வளர்வதை நாம் இங்கே காணலாம்.

"A.கடவுள், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு வழியாக, தன் திட்டத்தை செயலாற்ற தொடங்கினார். ஒரு கூட்டம் மக்களை உருவாக்கினார்."

 • நீங்கள் எல்லா மக்களிலும், “கடவுளின் தூய மக்களினம்” - இ.ச.7:6, 14:2.
 • நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்கள் - எசா 43:20.
 • எனக்கென்று நான் உருவாக்கிய என் மக்கள் - எசா 43:21.

"B.மோசே வழியாக அதை தொடர்ந்தார்."

 • எகிப்தில் “என் மக்கள்” படும் துன்பத்தைக் கண்டேன்.
  • அவர்கள் குரலைக் கேட்டேன்.
  • அவர்கள் துயரத்தை அறிந்தேன் - வி.ப. 3:7.

 • அவர்களை விடுவிக்கவும், அழைத்து செல்லவும் இறங்கி வந்தேன் - வி.ப. 3:8.
 • “என் மக்களை” நடத்தி செல்ல உன்னை பாரவோனிடம் அனுப்புவேன் - வி.ப. 3:10.
 • என் மக்களை போகவிடு – வி.ப. 5:1, 7:6, 8:1, 8:20, 9:1, 9:13, 10:3.
 • இஸ்ராயேல் மக்களை கூட்டிப் பேச கட்டளை – வி.ப. 3:16.
 • மோசே கடவுள் கட்டளைப்படியே மக்களைக் கூட்டினார் - எண் 9:23.
 • விடுதலைப்பயணம், “கூட்டமைப்புகளின்” தலைமையில் ஆரம்பம் - எண் 10:3.
 • பாஸ்கா பலி செலுத்த, “மக்கள் கூட்டமைப்பின்” “அனைத்து சபையையும் கூட்டினார்” - வி.ப. 12:6.
 • மலையில் கடவுளை சந்திக்க மக்கள் கூட்டத்தை தூய்மைப்படுத்தினார் - வி.ப. 19:14,15,6.
 • கடவுள் இஸ்ராயேல் “சபையாரோடு” பேசினார் - இ.ச. 5:22, 9:10, 10:4.
 • மோசே “கூட்டத்தை” வழிநடத்தினார், பேசினார் - லேவி 8:4,5.
 • மக்கள் கூடி கடவுளுக்கு கூடாரத் திருவிழா நடத்தினர் - லேவி 23:35-38.

 • "C.இத்திட்டம் நிறைவேற இறைவாக்கினர்களையும் பயன்படுத்தினார்."

  "1. தாவீது"

  • பரிசுத்தக் “கூட்டத்தில்” கடவுள் அஞ்சுதற்குரியவர் - தி.பா. 89:7.
  • மக்கள் கூட்டத்தில் அவரை துதியுங்கள் - தி.பா 107:32.
  • நீதிமான்களின் “கூட்டத்தில்” அவருக்கு நன்றி செலுத்துங்கள் - தி.பா 111:1.

  "2. எசாயா"

  • தப்பிப் பிழைத்தோரை “ஒன்று கூட்டுங்கள்” - எசா 45:20.
  • வார்த்தையை கூடி வந்து கேளுங்கள் - எசா 48:14.
  • ஒன்றாக சிந்தித்து முடிவெடுங்கள் - எசா 45:21.

  "3. எரேமியாஸ்"

  • ஒன்று கூடுங்கள், பாதுகாப்பான இடத்துக்கு செல்வோம் - எரே 4:5.
  • தனியே அமராமல், “ஒன்றாக கூடி” பாதுகாப்பான இடத்துக்கு செல்வோம் - எரே 8:14.

  "4. எசேக்கியேல்"

  • பலி செலுத்த “திரண்டு வாருங்கள்” - எசே 39:17.

  "5. யோவேல்"

  • பாவ பரிகாரம் செய்ய “ஒன்று கூடுங்கள்” - யோவே 1:14, 2:16.

  "6. மீக்கா"

  • எஸ்ரா, நெகேமியா மக்களை “ஒன்று திரட்டினார்கள்” - எஸ்ரா 9:4,10:1, நெகே 9:1.

  • மனம் வருந்த
  • மனம் திரும்ப
  • இறைசட்டத்தின்படி வாழ
  • இடிந்ததை கட்டி எழுப்ப
  • எதிரிகளை வெல்ல

  "D.இயேசு இதற்காகவே இவ்வுலகுக்கு வந்தார்."

  • கோழி தன் குஞ்சுகளை கூட்டுவது போல உங்களை கூட்ட வந்தேன் - லூக் 13:34.


  “III.இயேசுவின் ஊழியத்தில்“திருக்கூட்டம்” ஒன்று உருவாகிறது”


  "A.இயேசுவிடம் மக்கள் கூட்டமாக சென்றனர்."

  • “பெருந்திரளான மக்கள்” அவரை பின் தொடர்ந்தனர் - மத் 8:1.
  • “பெருந்திரளான மக்கள்” அவரை பின் தொடர்ந்தனர் - மாற் 3:7, மத் 19:1.
  • “பெருந்திரளான மக்கள்” அவரை தொடர்ந்தனர் - மத் 8:1.
  • “மக்கள் கூட்டம்” கூடியதால், அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை – மாற் 3:20.


  "B.உலக ஆசீர்வாதங்களை பெற கூடி வந்தனர்."

  • முடக்குவாதமுற்றவனை குணமாக்கிய போது, “மக்கள் கூடி வந்தனர்” - மத் 9:8.
  • நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டு சேர்த்தனர் - மத் 15:30.
  • “மக்கள் கூட்டமாக” வந்த போது, ஒருவரின் மகனின் பேய் மாறியது – மத் 17:14.
  • பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர் - மாற் 3:8.
  • நோய்கள் நீங்கி நலம்பெற, “பெருந்திரளான மக்கள்” அவரிடம் கூடிவந்தனர் - லூக் 5:15.
  • அங்கு “திரண்டிருந்த மக்கள்” யாவரும் அவரை தொடமுயன்றனர் - லூக் 6:19.


  "C.இறை வார்த்தையை கேட்க - கூடி வந்தனர்."

  • “மக்கள் கூட்டத்திடம்” பேச தொடங்கினார் - மத் 11:7.
  • உணவு வாங்க மக்களை அனுப்பிவிடும் - மத் 14:15.
  • “மக்கள் கூட்டத்தை” வரவழைத்து, “நான் சொல்வதை கேட்டு புரிந்து கொள்ளுங்கள்” – மத் 15:10.
  • அவர் கற்பிப்பதை கேட்டு, “மக்கள் திரண்டு வந்தனர்” - மாற் 4:1.
  • அவருடைய சொல்லை கேட்க, அவரிடம் கூடி வந்து கொண்டிருந்தார்கள் - லூக் 5:15.
  • ஆயிரக்கணக்கான “மக்கள் திரண்டு வந்திருந்த போது”, இயேசு தம் சீடரோடு பேசத் தொடங்கினார் - லூக் 12:1.


  "D.சீடர்களாக - கூடி வந்தனர்."

  • இயேசு மலை மீது ஏறி அமர அவருடைய சீடர் அவரருகே வந்தனர் - மத் 5:1.
  • “பெருந்திரளான அவருடைய சீடர்களும்” அங்கே இருந்தார்கள் - லூக் 6:17.
  • “திரண்டிருந்த சீடர்” கடவுளை புகழ்ந்தனர் - லூக் 19:37.– மத் 15:10.


  "E.ஊழியர்களாக - கூடி வந்தனர்."

  • இயேசு பன்னிருவரையும் அழைத்து, பேய்கள் ஓட்ட வல்லமையையும், அதிகாரத்தையும் கொடுத்தார் - லூக் 9:1.
  • எழுபத்திரண்டு பேரை, தமக்கு முன் இருவர் இருவராக ஊர்தோறும் அனுப்பினார் - லூக் 10:1.
  • இயேசு தம் சீடர்களுக்கு, பாவம் போக்கும் அதிகாரத்தை கொடுத்தார் - யோவா 20:19,23.
  • பதினொருவரும், அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருந்தனர் - லூக் 24:33.
  • திருத்தூதர்கள், தாங்கள் செய்தவை, கற்பித்தவை எல்லாம் அவருக்கு தெரிவித்தனர் - மாற் 6:30.

  "F.நண்பர்களாக கூடி வந்தனர்."

  • உங்களை நான் நணபர்கள் என்றேன் - யோவா 15:15.
  • இயேசு கிறிஸ்துவுடன் கொண்டுள்ள நட்புறவு – 1யோவா 1:3.
  • இருளில் நடப்பவர்க்கு, அவரோடு நட்புறவு இல்லை – 1யோவா 1:6.


  “IV.இயேசுவின் கட்டளைப்படி வாழ, முன் வந்த மக்கள் “திருக்கூட்டமாக” கூடி”

  • ஜெபித்தனர் - லூக் 1:10.
  • கூடி மனம் திரும்பினர் - லூக் 3:7.
  • தங்கள், மேல் உடைகளை விரித்து வணங்கினர் - மத் 21:8.
  • ஓசான்னா பாடினர் - மத் 21:9.
  • விசுவாச அறிக்கை செய்தனர் - மத் 21:11.
  • கூடி சாட்சி பகர்ந்தனர் - மத் 21:46.


  "A.இத்திருக்கூட்டத்தை உருவாக்க இயேசு தம் ஊழியருக்கு பணித்தார்."

  • என்னோடு இணைந்து மக்களை கூட்டிச் சேர்க்காதவர் அவர்களை சிதறடிக்கிறார் - லூக் 11:23.
  • எல்லாரையும் சீடராக்குங்கள் - மத் 28:19.


  "B.ஊழியர்கள் தாங்களே முதல், “திருக்கூட்டமாக” மாறினர்."

  • ஊழியர்கள் கூடி உயிர்த்த இயேசுவை பெற்றனர் - லூக் 24:33.
  • ஊழியர்கள் கூடி ஊழியக் கட்டளையை பெற்றனர் - மாற் 16:15-20.
  • ஊழியர் கூடி துதித்தனர் - லூக் 24:53.
  • ஊழியர் கூடி பெந்தெகோஸ்தே அனுபவம் பெற்றனர் - தி.தூ 2:1.
  • ஊழியர் கூடி முதல் ஊழியம் தொடங்கினர் - தி.தூ 2:14.


  "C.ஆதிசபையில் ஆவிக்குரிய திருக்கூட்டம்"

  • ஆதி அப்போஸ்தலர்களின் கூடுதல் - தி.தூ 2:42-47.
   • கூடி ஊழியம் - தி.தூ 2:42-44.
   • கூடி வாழ்வு – தி.தூ 2:45-47.

  • கூடி வாழ்ந்தனர் - தி.தூ 4:32-37.
  • கூடி ஜெபித்த போது - இடம் அதிர்ந்தது – தி.தூ 4:31.
  • வார்த்தையை கேட்க கூடியிருந்தனர் - தி.தூ 10:33.
  • கூடியிருந்தவர் மேல் பரிசுத்த ஆவி – தி.தூ 10:44.
  • கூடி பணி செய்தனர் - தி.தூ 15:25.


  "D.வீட்டுக்கூட்டங்கள் "

  • மாற்குவின் வீட்டில் கூடி – தி.தூ 12:12.
  • பிரிஸ்கா, அக்கரிப்பா, வீட்டில் கூட்டம் - தி.தூ 16:5 (1கொரி 16:19).
  • காயுவின் வீட்டில் கூட்டம் - தி.தூ 16:23.
  • பிலமோன் வீட்டில் கூட்டம் - பில 1:2.
  • சகோ. நிம்மாவின் வீட்டில் கூட்டம் - கொலோ 4:15.


  "பரிசுத்தக் கூட்டம் - திருச்சபையாக மாறியது"

  விசுவாசிகள் கூடிய போது – அதை “சபை” என்றும் “திருச்சபை” என்றும் அழைத்தார்கள்.

  "1.திருச்சபையார் (என்ற வார்த்தை)"

  • திருச்சபையாரை பேரச்சம், ஆட்கொண்டது – தி.தூ 5:11.
  • திருச்சபையை கூட்டி, கடவுள் செய்ததை அறிவித்தார்கள் - தி.தூ 14:27.
  • திருச்சபையார், பவுலையும், பர்னபாவையும் வழியனுப்பி வைத்தனர் - தி.தூ 15:3.
  • யெருசலேமில் திருச்சபையார் வரவேற்றனர் - தி.தூ 15:4.
  • அந்தியோக்கியாவிற்கு சிலரை அனுப்ப திருச்சபையார் தீர்மானித்தனர் - தி.தூ 15:22.
  • எருசலேம் திருச்சபையாரை வாழ்த்தி திரும்பினார் - தி.தூ 18:22.


  "2.திருச்சபை (என்ற வார்த்தை)"

  • இறைவாக்குரைப்பவர் - திருச்சபை வளர்ச்சியுற செய்கிறார் - 1கொரி 14:4.
  • பரவசப்பேச்சு, திருச்சபையை – கட்டி எழுப்பும் நோக்குடன் அமைதல் வேண்டும் - 1கொரி 14:5.
  • திருச்சபையை கட்டி எழுப்பும் கொடைகளைத் தேடுங்கள் - 1கொரி 14:12.
  • திருச்சபையில், பரவசப்பேச்சை குறைத்து, இறைவாக்கு வரத்தை அதிகமாக்குங்கள் - 1கொரி 14:15.
  • திருச்சபை – முழுவதும் ஒன்றாக கூடியிருக்கும் போது – 1கொரி 14:23.
  • திருச்சபை – அமைதி காக்கட்டும் - 1கொரி 4:28.
  • பெண்கள் திருச்சபையில் - பேச வேண்டாம் - 1கொரி 14:35.


  "3.ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள விசுவாசிகளின் திருக்கூட்டத்தை “தலத்திருச்சபை” என்றனர்."

  • எருசலேம் திருச்சபை – தி.தூ 8:1.
  • அந்தியோக்கிய திருச்சபை – தி.தூ 13:1.
  • ஒவ்வொரு திருச்சபைகளிலும் - தி.தூ 14:23.
  • கெங்கிரேயாவில் உள்ள திருச்சபை – உரோ 16:1.
  • லவோதிக்கேயா திருச்சபை – கொலோ 4:16.


  "4.ஆவியானவரின் தலைமையின் கீழ் இயங்கும் அகில உலக விசுவாசிகளின் கூட்டத்தை “திருச்சபை” என்றார்."

  • கடவுளின் திருச்சபை – 1கொரி 1:1, 15:9, 2திமொ 1:1, 1:13.


  "5.அபிஷேகம் பெற்றவர்களின் “திருக்கூட்டம்” திருச்சபை."

  • கிறிஸ்து திருச்சபைக்கு தலை – நாம் உடல் - எபே 1:22,23, 5:23.
  • கிறிஸ்துவும், சபையும் - மணவாளன் - மணவாட்டி – எபே 5:23-32.


  "PART-II.இன்றைய திருச்சபைகள்"


  “ஸ்தாபன சபைகளும் ஆவிக்குரிய சபைகளும்”


  "பைபிள் திருச்சபை"

  • இன்றைய திருச்சபைகளை பைபிள் திருச்சபையோடு இணைத்துப் பார்ப்பது கடினமாக உள்ளது.
  • எனவே இன்றைய திருச்சபைகளைப் பற்றிய ஒரு சுருக்கமான பாடத்தை நாம் கீழே காண வேண்டும்.

  "இன்றைய திருச்சபைகள்"

  • இன்றைய திருச்சபைகளை இரண்டாகப் பகுத்து சொல்லலாம்.

  • ஸ்தாபன சபைகள் (Institutional Churches)
  • ஆவிக்குரிய சபைகள் (பெந்தக்கோஸ்து சபைகள்)

  "ஸ்தாபன சபைகள்"

  • ஸ்தாபன சபைகள் இரண்டு வகைப்படும்.
   • கத்தோலிக்க ஸ்தாபன சபைகள்.
   • புராட்டஸ்டண்டு அதாவது சீர்திருத்த ஸ்தாபன சபைகள்.

  • கத்தோலிக்க ஸ்தாபன சபைகள் - உரோமன் கத்தோலிக்க சபை,சிறியன் கத்தோலிக்க சபை, மலங்கரை கத்தோலிக்க சபை போன்றவை.
  • புராட்டஸ்டண்டு ஸ்தாபன சபைகள் – CSI சபை, ஆங்கிளிக்கன் சபை, லூத்தரன் சபை, இரட்சண்ய சேனை சபை போன்றவை.

  "ஆவிக்குரிய சபைகள் அல்லது பெந்தக்கோஸ்து சபைகள்"

  • ஆவிக்குரிய சபைகள் இரண்டு வகைப்படும்.

  • கத்தோலிக்க ஆவிக்குரிய சபைகள்.
  • புராட்டஸ்டண்டு ஆவிக்குரிய சபைகள்.

  "1. கத்தோலிக்க ஆவிக்குரிய சபைகள்"

  • கத்தோலிக்க கரிஸ்மேட்டிக் சபைகள் (Catholic Charismatic Churches) – கனடா,அமெரிக்கா,இங்கிலாந்து;
  • கத்தோலிக்க கரிஸ்மேட்டிக் பெத்தானியா சபைகள் (Catholic Charismatic Bethany Churches) - கனடா;
  • கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபைகள் (Catholic Pentecost Churches) - ஸ்பெயின்;
  • கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன் (Catholic Pentecost Mission) - மார்த்தாண்டம் போன்றவை.

  "2. புராட்டஸ்டண்டு ஆவிக்குரிய சபைகள்"

  • இந்தியன் பெந்தக்கோஸ்து சபைகள்,
  • பூரண நற்செய்தி சபைகள்,
  • கிருபாசன சபைகள்,
  • அசம்பிளி ஆஃப் காட் சபைகள் போன்றவை.

  "கத்தோலிக்க ஆவிக்குரிய சபைகளுக்கும், புராட்டஸ்டண்டு ஆவிக்குரிய சபைகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்"

  "ஒற்றுமைகள்"

  • ஒரே ஆவிக்குரிய அனுபவங்கள்,
  • விசுவாச உறுதி,
  • சத்தியங்கள் மேல் கொண்ட, வைராக்கிய பிடிப்பு,
  • ஆவியின் கனிகள் மேலும், இறை விருப்பத்தின் மீதும், வைத்துள்ள அலாதி பற்று,
  • வேத வெறி.

  "வேற்றுமைகள்"

  புராட்டஸ்டண்டு ஆவிக்குரிய சபைகள்கத்தோலிக்க ஆவிக்குரிய சபைகள்
  1. பைபிள் - புராட்டஸ்டண்டு 1.பைபிள் - கத்தோலிக்க பைபிள்
  2. பைபிள் விளக்கம் - புராட்டஸ்டண்டு (சிலர் தனி விளக்கம்)2. பைபிள்விளக்கம் - கத்தோலிக்க பைபிள் விளக்கம்
  3.வழிபாடு- புராட்டஸ்டண்டு வழிபாட்டு முறை3. வழிபாடு- கத்தோலிக்க வழிபாட்டு முறை
  4. விசுவாசப்பிரமாணம் - புராட்டஸ்டண்டு4.விசுவாசப்பிரமாணம் - கத்தோலிக்க
  5. பாரம்பரியம் - புராட்டஸ்டண்டு பாரம்பரியம்5. பாரம்பரியம் - கத்தோலிக்க பாரம்பரியம்

  "கத்தோலிக்க ஸ்தாபன சபைகளுக்கும், கத்தோலிக்க ஆவிக்குரிய சபைகளுக்கும் உள்ள,ஒற்றுமை வேற்றுமைகள்"

  • கத்தோலிக்க ஆவிக்குரிய சபைகள், கத்தோலிக்க ஸ்தாபன சபைகளுடைய, நிர்வாகத்தின் கீழ் இல்லை.
  • கத்தோலிக்க ஆவிக்குரிய சபைகள்,கத்தோலிக்க ஸ்தாபன சபைகளுடைய விசுவாசப்பிரமாணத்தை,வழிபாட்டை, பைபிள் விளக்கத்தை ஆதி ஆவிக்குரிய வெளிச்சத்தில், ஏற்றுக் கொள்கின்றன.


  "PART-III.இயேசு ஸ்தாபித்த ஆவிக்குரிய சபை"


  “இன்று நாம் காணும், ஸ்தாபன சபைகளும், ஆவிக்குரிய சபைகளும், பைபிளில் தோன்றிய வரலாற்றை, சுருக்கமாக காண்போம்.”

  • இயேசு வாழ்ந்த காலத்தில், ஒரு சபை உருவானது.
  • இந்த சபையை, “ஸ்தாபன சபை” என்கிறோம்.
  • இந்த ஸ்தாபன சபையைப் பற்றிய ஒரு சுருக்கமான பாடத்தை கீழே காண்போம்.

  "இயேசு வாழ்ந்த காலத்தில் உருவான ஸ்தாபன சபையின் தன்மைகள்"

  • இயேசுவே அந்த சபையை உருவாக்கினார் - மத் 4 :18-22 ; 9 :9-13 ; லூக் 6 :12-16.
  • அந்த சபையில்,போதனைகள் இருந்தன - மத் 4:23; மத் 5,6,7அதி.
  • அங்கே புதுமைகள் நடந்தன - மத் 4 :24;மாற் 6:13.
  • அந்த திருச்சபையில்,திருச்சபையின் தலைவர் இருந்தார் - மத் 16 :18.
  • அவர்களுக்கு,அப்போஸ்தலர் இருந்தனர் - லூக் 9 :1-6.
  • அந்த திருச்சபையில்,இயேசுவின் வழிநடத்தல் இருந்தது - மத் 10:16-40.
  • அங்கு திருப்பணிகள் சிறப்பாக நடந்தன - லூக் 10 :1-20.
  • அந்த திருச்சபையில்,திருச்சங்கங்கள் நடந்தன - மாற் 6 :30,31; லூக் 10:17-20.
  • அங்கே போதனையை “ஏற்றுக் கொண்ட” மக்களுக்கு,“திருமுழுக்கு” வழங்கப்பட்டது – யோவா 3:22-23,26, 4:1-3.

  "இயேசு வாழ்ந்த காலத்தில் உருவான ஸ்தாபன சபையின் சில குறைகள்"

  "பேதுரு - தலைவர்"

  • ஸ்தாபன சபையின் தலைவராகிய பேதுரு,மனித கருத்துக்களுக்கு சொந்தக்காரர் - மத் 16 :23.
  • ஸ்தாபன சபையின் பேதுரு,பாடுகளை ஏற்க மனமில்லாதவர் - மத் 16 :22.
  • ஸ்தாபன சபையின் பேதுருவுக்குள்,பேயின் தன்மைகள் இருந்தன - மத் 16 :23.
  • ஸ்தாபன சபையின் பேதுரு,இயேசுவின் கோபத்துக்கு உள்ளானவர் - மத் 16:23.
  • ஸ்தாபன சபையின் பேதுருவிடம்,சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்க,இயேசுவுக்கு எதிர் சாட்சியாகி,அவரை மறுதலிக்கும்,தீமை இருந்தது - மத் 26:69-75.

  "திருத்தூதர்கள்"

  • ஸ்தாபன சபையை ஆண்ட திருத்தூதர்களிடம்,நீ பெரியவனா?நான் பெரியவனா? என்ற போட்டி மனப்பான்மை இருந்தது - மத் 18:1-5 ; லூக் 22:24-27.
  • ஸ்தாபன சபையின் திருத்தூதர்,இயேசுவின் துன்பத்தில்,அவரை விட்டு ஓடிப்போனார்கள் - மத் 26 :56 ; மாற் 14:50.
  • ஸ்தாபன சபையின் திருத்தூதரிடம், பண ஆசையும்,பணத்துக்காக சபையை அழிக்கவும்,இயேசுவையே கொலை செய்யும் துணிவும் நிறைந்திருந்தது - மத் 26 :14-16.

  "விசுவாசிகளின் கூட்டம்"

  • ஸ்தாபன திருச்சபையின் விசுவாசிகள்,உலக ஆதாயத்தை மட்டுமே,நோக்கமாக கொண்டிருந்தனர் - மத் 14:13-21.
  • அவர்கள், அழிந்து போகும்,அப்பத்துக்காகவே,இயேசுவுக்கு பின் சென்றனர் - யோவா 6 :26:26,27.
  • ஸ்தாபன சபையின் விசுவாசிகள்,கண்டால் மட்டும் விசுவசிக்கிறவர்கள் - யோவா 20:29.

  "சீடர்கள்"

  • ஸ்தாபன சபையின் சீடர்கள்,ஆழமான சத்தியங்களை,இயேசு பேசியபோது,இது “அதிகப்பிரசங்கம்” என்று கூறி,இயேசுவை விட்டு,ஓடிப் போயினர் - யோவா 6 :59-60.

  "பக்தர்கள்"

  • ஸ்தாபன சபையில் பக்தி வைராக்கியம் உள்ள சிலரும்,இயேசுவோடு இருந்தனர்.
  • ஸ்தாபன திருச்சபையில்,இயேசுவின் தாய் இருந்தார் - மாற் 3:32; யோவா 19:25.
  • ஸ்தாபன திருச்சபையில்,பக்தியுள்ள வேறு பெண்கள் - சிலரும் இருந்தனர் - லூக் 8:1-3 ; லூக் 23:27-31.
  • ஸ்தாபன திருச்சபையில்,சிலுவையின் அடிவரை,இயேசுவுக்கு பின் சென்றவர்கள் இருந்தார்கள்- யோவா 19:25-27.
  • ஸ்தாபன திருச்சபையில்,இயேசுவை,சிலுவையிலிருந்து இறக்கி அடக்கம் செய்தவர் இருந்தார் - யோவா 20:38-42;யோவா 12:4,4:39,42.

  "திருமுழுக்கு"

  • ஸ்தாபன திருச்சபையில், இயேசுவின் சீடர்கள், எங்கும் சென்று தூதுரைத்தனர். அவர்களுடைய நற்செய்தியை ஏற்றவர்களுக்கு, திருமுழுக்கு கொடுத்து, அவர்களை தங்களோடு சேர்த்துக் கொண்டார்கள் - யோவா 3:22-23, 4:1-3.


  “இயேசுவின் திட்டம்”

  "ஆனால், பைபிளில், ஸ்தாபன சபைகள் - ஆவிக்குரிய சபைகளாக மாறுவதே, “இயேசுவின் திட்டம்”"

  • இயேசு வாழ்ந்த காலத்தில் உருவாகிய ஸ்தாபன சபையின் தன்மைகளைக் கண்டோம்.
  • இந்த ஸ்தாபன சபை, ஆவிக்குரிய சபையாக உருமாற வேண்டும் என்பதே, இயேசுவுடைய “பணித்திட்டம்”.
  • இதற்காகவே, தம்மோடிருந்த தம் சீடர்களை, இயேசு ஆயத்தப்படுத்தினார்.

  "ஆயத்தங்கள்"

  • ஆவிக்குரிய சபை உருவாக இயேசு செய்த ஆயத்தங்களை பைபிளில் காண்போம்:

  • தாம் உருவாக்கிய ஸ்தாபன சபை, குறையுள்ளதே என்பதை, இயேசு அறிவார்.
  • இயேசுவின் நோக்கம், இப்படி ஒரு ஸ்தாபன சபையை ஏற்படுத்திவிட்டு போவது அல்ல.
  • மாறாக, இந்த ஸ்தாபன சபை, ஆவிக்குரிய சபையாக மாற வேண்டும்.
  • அதற்கான போதனைகளை தந்து, இயேசு தன் சீடரை ஆயத்தப்படுத்தினார்.

  "ஒரு ஆவிக்குரிய சபையின் தன்மைகள்"

  • ஆவிக்குரிய விசுவாசி, மனம் மாறியவராயிருக்க வேண்டும் - மாற் 1:15.
  • ஆவிக்குரிய விசுவாசி, பாவமன்னிப்பு பெற்றவராக இருக்க வேண்டும் - தி.ப 2:38.
  • இவ்வாறு, ஆவிக்குரிய விசுவாசி, மீட்படைய வேண்டும் - லூக் 24:47, 1:77.
  • மீட்படைந்த விசுவாசி, அருட்பொழிவு பெற வேண்டும்- 2கொரி 5:5, தி.ப 2:38.
  • மீட்படைந்து, அருட்பொழிவு பெற்ற விசுவாசி, திருமுழுக்கால், கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையில் உறுப்பாகிறார் - தி.ப 2:41, கலா 3:27, உரோ 6:5, எபே 1:22,23, 1கொரி 12:13.
  • அருட்பொழிவு பெற்ற, ஒரு ஆவிக்குரிய விசுவாசி, “இறையாட்சியில்” வாழ்கிறார் - 2பேது 1:11.
  • அவ்வண்ணமே, ஆவிக்குரிய விசுவாசி, “நிலைவாழ்வை” இவ்வுலகிலேயே வாழ ஆரம்பிக்கிறார் - யோவா 3:14,36, 4:14, லூக் 18:20.

  "1.மனம் மாறுதல்"

  • ஆவிக்குரிய விசுவாசி, மனம் மாறியவராயிருக்க வேண்டும் - மாற் 1:15.

  "மனம் மாறுதலுக்கான இயேசுவின் உபதேசங்கள்"

  • மனம் மாறுங்கள், விண்ணரசு நெருங்கிவிட்டது – யோவான் - மத் 3:4.
  • நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை செயலில் காட்டுங்கள் - யோவான் - மத் 3:8.
  • நீங்கள் மனம் மாறுவதற்காக, நான் தண்ணீரால் திருமுழுக்கு கொடுக்கிறேன் - யோவான் - மத் 3:11.
  • பாவமன்னிப்பு அடைய, மனம் மாறி திருமுழுக்கு பெறுங்கள்- யோவான் - லூக் 3:3.
  • மனம் மாறுங்கள் , விண்ணரசு நெருங்கி விட்டது – இயேசு – மத் 4:17.
  • நான் பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன் - இயேசு - லூக் 5:32.
  • மனம் மாறிய பாவியைக் குறித்து, விண்ணில் மகிழ்ச்சி உண்டாகும் - இயேசு - லூக் 15:7,10.
  • மனம் மாறினால், மன்னியுங்கள் - இயேசு – லூக் 17:3,4.
  • இறந்த ஒருவர், அவர்களிடம் போனால், அவர்கள் மனம் மாறுவார்கள் -செல்வந்தன் - லூக் 16:30.
  • மனம் மாறாவிட்டால், அழிவு காத்திருக்கிறது என்று, இயேசு எச்சரித்தார் - லூக் 13:3,5.
  • தாம் புதுமைகள் செய்தும், மனம் மாறாத நகரங்களை, இயேசு கண்டித்தார் - மத் 11:20,21, 12:41, 13:15.

  "2. பாவமன்னிப்பு"

  • ஆவிக்குரிய விசுவாசி, பாவமன்னிப்பு பெற்றவராக இருக்க வேண்டும் - தி.ப 2:38.

  "பாவமன்னிப்புக்கான இயேசுவின் உபதேசங்கள்"

  • பாவமன்னிப்பு அடைய மனம் மாறி, திருமுழுக்குப் பெறுங்கள் - யோவான் - மாற் 1:4, லூக் 3:3.
  • மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, திருமுழுக்கு பெற்று வந்தனர் - யோவானிடம் - மத் 3:6, மாற் 1:5.
  • இயேசு, பாவமன்னிப்புக்காக ஜெபிக்க கற்றுக் கொடுத்தார். “பிறர் குற்றங்களை, நாங்கள் மன்னித்துள்ளது போல, எங்கள் குற்றங்களை மன்னியும்” – மத் 6:12, லூக் 11:4.
  • மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை, நீங்கள் மன்னிப்பீர்களானால், உங்கள் விண்ணக தந்தையும், உங்களை மன்னிப்பார் - மத் 6:14.
  • பிறரை மன்னிக்காதவர்களுக்கு, மன்னிப்பு இல்லை – மத் 6:15, 18:35.
  • சகோதரர் பாவம் செய்தால், எழுபது முறை, ஏழு முறை மன்னிக்க வேண்டும் - மத் 18:21,22.
  • மன்னியுங்கள், மன்னிப்பு பெறுவீர்கள் - லூக் 6:37.
  • குறைவாக மன்னிப்பு பெறுவோர், குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர் - லூக் 7:47.
  • நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் - மத் 9:13,மாற் 2:17.
  • ஒருவர் கூட, நெறிதவறிப் போகக்கூடாது என்பதே, வானகத் தந்தையின் திருவுளம் - மத் 18:14.
  • பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன் - லூக் 5:32.
  • இயேசு, உலகின் பாவங்களை போக்குபவர் - யோவா 1:29.
  • மண்ணுலகில், பாவங்களை மன்னிக்க, மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு – மத் 9:5, மாற் 2:10, லூக் 5:24.
  • இயேசு, தம் மக்களை, அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் - மத் 1:21 .
  • நானும் தீர்ப்பளிக்கவில்லை, நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர் - யோவா 8:11.
  • இவர் ( பாவியான பெண்) செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன – லூக் 7:47,48.
  • உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன – இயேசு முடக்கு வாதமுற்றவனிடம் - மத் 9:2, மாற் 2:5.
  • இயேசு, “தந்தையே இவர்களை மன்னியும், ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை” என்றார் - லூக் 23:34.
  • பாவ மன்னிப்பு பெற, மனம் மாறுங்கள் என்று போதிக்க, இயேசு கட்டளையிட்டார் - லூக் 24:47.

  "3. மீட்பு"

  • ஆவிக்குரிய விசுவாசி, மீட்படைய வேண்டும் - லூக் 24:47, 1:77.

  "மீட்பு பற்றிய இயேசுவின் உபதேசங்கள்"

  • மானிடமகன், பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பதற்கு வந்தார். – மத் 20:28.
  • இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்பு பெறுவர். –மத் 24:13.
  • இறைவார்த்தைகளை நம்பி, மக்கள் மீட்பு பெறாதவாறு, அலகை வந்து வார்த்தைகளை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது. – லூக் 8:12.
  • இடுக்கமான வாயில் வழியாக நுழைபவரே மீட்பு பெறுவர். – லூக் 13:23,24.
  • ஒருவரை மீட்படையச் செய்வது, கடவுளுடைய செயல் - லூக் 18:26,27.
  • இயேசு சென்ற சக்கேயுவின் வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று – லூக் 19:9.
  • தலைநிமிர்ந்து நில்லுங்கள். உங்கள் மீட்பு நெருங்கி வருகிறது – லூக் 21:28.
  • நீங்கள் மீட்பு பெறுவதற்காகவே, நான் இவற்றை யெல்லாம் சொல்கிறேன் - யோவா 5:34.
  • மானிடமகன், நெறிதவறியோரை மீட்கவே வந்தார் - மத் 18:11.
  • நான் உலகை மீட்கவே வந்தேன் - யோவா 12:47.

  "4. அருட்பொழிவு"

  • மீட்படைந்த விசுவாசி, அருட்பொழிவு பெற வேண்டும் - 2கொரி 5:5, தி.ப 2:38.

  "அருட்பொழிவு பற்றிய இயேசுவின் உபதேசங்கள்"

  • வானகத்தந்தை, தம்மிடம் கேட்பவருக்கு, தூய ஆவியைக் கொடுப்பார் - லூக் 11:13.
  • ஒருவர் தூய ஆவியால் பிறந்தாலன்றி, இறை ஆட்சியில் நுழைய முடியாது – யோவா 3:3-8.
  • தாகமாயிருப்பவருக்கு, தூய ஆவி எனும் ஜீவத்தண்ணீரைத் தருவேன் - யோவா 7:37-39.
  • உங்களோடு இருக்க, துணையாளரை அனுப்புவேன் - யோவா 14:16,17.
  • தூய ஆவியார், நான் கூறிய அனைத்தையும், உங்களுக்கு நினைவூட்டுவார் - யோவா 14:26.
  • தூய ஆவியார், என்னைப் பற்றி சான்று பகர்வார் - யோவா 15:26.
  • துணையாளரை உங்களிடம் அனுப்புவேன் - யோவா 16:7.
  • தூய ஆவி உங்களை, நிறைவான உண்மையை நோக்கி வழிநடத்துவார் - யோவா 16:8-14.
  • தந்தை வாக்களித்த வல்லமைக்காக காத்திருங்கள் - லூக் 24:49, தி.ப 1:4,5.
  • அவர்கள், தூய ஆவிக்காக காத்திருந்து ஜெபித்தார்கள் - தி.ப 1:14.
  • ஆலயத்தில் இடைவிடாமல் ஸ்தோத்தரித்துக் கொண்டிருந்தார்கள் - லூக் 24:53.
  • தந்தை வாக்களித்த ஆவியை, பெந்தக்கோஸ்து நாளன்று, ஆதி சீடர்கள் பெற்றுக் கொண்டார்கள் - தி.ப 2:1-4.

  "5. ஆவிக்குரிய திருமுழுக்கு"

  "I. இயேசு,திருமுழுக்குக்கு அளித்த முக்கியத்துவம்,அவர் திருமுழுக்கு யோவானுக்கு அளித்ததில் வெளிப்படுகிறது"

  • மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிட, பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும், விண்ணரசில் மிகச் சிறியவரும், அவரினும் பெரியவரே என, நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் - மத் 11:11.
  • திருமுழுக்கு யோவானின் காலமுதல், இந்நாள் வரையிலும், விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர் - மத் 11:12.
  • அதற்கு அவர்கள், ‘சிலர் திருமுழுக்கு யோவான் எனவும், வேறு சிலர் எலியா எனவும், மற்றும் சிலர், எரேமியா அல்லது, பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்’ என்றார்கள் - மத் 16:14.
  • திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை, அப்பொழுது சீடர்கள் புரிந்து கொண்டார்கள் - மத் 17:13.
  • யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா, மனிதரிடமிருந்தா? என்று அவர் கேட்டார். அவர்கள், ‘விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், ‘பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை’ எனக் கேட்பார் - மத் 21:25.
  • யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ, இன்னும் சில நாட்களில், தூய ஆவியால், திருமுழுக்குப் பெறுவீர்கள் என்றார் - தி.ப 1:5.

  "II.இயேசு பெற்ற திருமுழுக்கு"

  • அதன் பின் இயேசு, யோவானிடம் திருமுழுக்குப் பெற, கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார் - மத் 3:13.
  • யோவான், ‘நான் தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன். நீரா என்னிடம் வருகிறீர்? என்று கூறி தடுத்தார் - மத் 3:14.
  • இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே, தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே, வானம் திறந்ததையும், கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும், அவர் கண்டார் - மத் 3:16.

  "III.இயேசு அளித்த திருமுழுக்கு"

  • இவற்றுக்கு பின்பு, இயேசுவும் அவர்தம் சீடரும், யூதேயப் பகுதிக்கு சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார் - யோவா 3:22.
  • அவர்கள் யோவானிடம் போய், ‘ரபீ, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே! நீரும் அவரைக் குறித்து சான்று பகர்ந்தீரே! இப்போது, அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்’ என்றார்கள் - யோவா 3:26.
  • யோவானை விட, இயேசு மிகுதியான சீடர்களை சேர்த்துக் கொண்டு, திருமுழுக்குக் கொடுத்து வருகிறார் என்று, பரிசேயர் கேள்வியுற்றனர் - யோவா 4:1.
  • ஆனால் உண்மையில், திருமுழுக்குக் கொடுத்தவர், இயேசு அல்ல. அவருடைய சீடர்களே – யோவா 4:3.
  • யோர்தானுக்கு அப்பால், யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு, இயேசு மீண்டும் சென்று, அங்குத் தங்கினார் - யோவா 10:40.

  "IV.இயேசு பெற விரும்பிய திருமுழுக்கு"

  • இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என, உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில், உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை, உங்களால் பெற இயலுமா?” என்று கேட்டார்.
  • அவர்கள் அவரிடம், “இயலும்” என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, “நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள்” என்றார் - மாற் 10:38,39.

  "V.திருமுழுக்குப் பற்றிய இயேசுவின் உபதேசம்"

  • நிக்கதேம், ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, ‘ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை, நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை, யாரும் செய்ய இயலாது” என்றார் - யோவா 3:2.
  • இயேசு அவரைப் பார்த்து, “மறுபடியும் பிறந்தாலன்றி, எவரும் இறையாட்சியைக் காண இயலாது என, மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்” என்றார் - யோவா 3:3.
  • நிக்கதேம் அவரை நோக்கி, ‘வயதானபின், ஒருவர் எப்படி பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து, பிறக்க முடியுமா? என்று கேட்டார் - யோவா 3:4.
  • இயேசு அவரைப் பார்த்து, ‘ஒருவர் தண்ணீராலும், தூய ஆவியாலும் பிறந்தாலன்றி, இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று, மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன். மனிதரால் பிறப்பவர், மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர், தூய ஆவியின் இயல்பை உடையவர் - யோவா 3:5,6.
  • நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று, நான் உமக்குக் கூறியது பற்றி, நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால், அது எங்கிருந்து வருகிறது என்றும், எங்குச் செல்கிறது என்றும், உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும் - யோவா 3:7,8.

  "VI.ஆவிக்குரிய சபையில் திருமுழுக்கு அளிக்க, இயேசுவின் கட்டளை"

  • “எனவே, நீங்கள் போய், எல்லா மக்களினத்தாரையும் சீடராக் குங்கள். தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால், திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும், அவர்களும் கடைபிடிக்கும்படி, கற்பியுங்கள்” என்று கூறினார் - மத் 28:19,20.
  • இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம், நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைக் கொண்டு, திருமுழுக்குப் பெறுவோர் மீட்பு பெறுவர். நம்பிக்கையற்றவரோ, தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்” – என்றார் - மாற் 16:15,16.

  "6. இறையாட்சி"

  • திருமுழுக்கால், திருச்சபையின் உறுப்பினரான ஒரு ஆவிக்குரிய விசுவாசி, இறையாட்சியில் வாழ்கிறார் - 2பேது 1:11.

  "இறையாட்சி பற்றிய உபதேசங்கள்"

  "இறையாட்சிக்கு அழைப்பு"

  • மனம் மாறுங்கள், இறையாட்சி நெருங்கி வந்து விட்டது – மத் 3:2.
  • மனம் மாறுங்கள், இறையாட்சி நெருங்கி வந்து விட்டது - இயேசு – மத் 4:17.
  • இயேசு சீடரிடம் - இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என அறிவியுங்கள் - லூக் 10:9.

  "யாருக்கு இறையாட்சி"

  • ஏழையரின் உள்ளத்தோருக்குக்கு இறையாட்சி – மத் 5:3.
  • நீதியின் பொருட்டு, துன்புறுத்தப்படுவோருக்கு இறையாட்சி - மத் 5:10.
  • பலவந்தம் பண்ணுகிறவர், இறையாட்சியை கைப்பற்றிக் கொள்வர் - மத் 11:12.
  • இறையாட்சி சிறுபிள்ளைகளுக்குரியது – மத் 19:14.
  • பிதாவின் விருப்பம் நிறைவேற்றுபவர்க்கு இறையாட்சி – மத் 7:21.
  • இயேசுவின் பொருட்டு, எல்லாம் இழப்பவருக்கு இறையாட்சி – மத் 13:44,46.
  • குழந்தையாய் மாறினால், இறையாட்சி – மத் 18:3.
  • பிறர் குறையை, மன்னிப்பவர்க்கு இறையாட்சி – மத் 18:23-35.
  • இயேசுவின் பொருட்டு, தன்னை அண்ணகராக்கி யோருக்கு இறையாட்சி – மத் 19:12.
  • மனம் திரும்பும், பாவிக்கு இறையாட்சி – மத் 21: 31.
  • ஆவியில் பிறப்பவனுக்கு இறையாட்சி – யோவா 3:3,5.
  • இயேசுவின் சிறிய மந்தைக்கு இறையாட்சி – லூக் 12:32.

  "இறையாட்சியின் தன்மைகள்"

  • இறையாட்சி, புளிப்பு மாவுக்கு ஒப்பாகும் - மத் 13:33.
  • இறையாட்சி, புதையலுக்கு ஒப்பாகும் - மத் 13:44.
  • இறையாட்சி, விலையுயர்ந்த முத்தை கண்ட வணிகருக்கு ஒப்பாகும் - மத் 13:45,46.
  • இறையாட்சி, எல்லாவகை மீன்களையும், வாரி வரும், வலைக்கு ஒப்பாகும் - மத் 13:47.
  • இறையாட்சி, மணமகனை எதிர்கொண்டு செல்லும், கன்னியருக்கு ஒப்பாகும் - மத் 25:1.

  "இறையாட்சியின் அடையாளம்"

  • இயேசு, கடவுளின் ஆவியால், பேய்களை ஓட்டுவது, இறையாட்சி வந்ததற்கு அடையாளம் மத் 18:28.
  • ஊழியர், பேயை ஓட்டுவது, இறையாட்சிக்கு அடையாளம் - லூக் 11:20.
  • இறையாட்சி வந்து விட்டது – லூக் 17:20.

  "இறையாட்சியைப் பற்றிய இயேசுவின் போதனை தொடர்ச்சி"

  • இறையாட்சியில் எல்லாரும் வருவர். தகுதியுடையவரே நிலைப்பர் - மத் 13:47.
  • இறையாட்சி பற்றி, எல்லாருக்கும் அறிவிக்கப்பட்ட பின்பே, முடிவு வரும் - மத் 24:14.
  • இறையாட்சி வல்லமையோடு வரும் - மாற் 9:1.
  • இறையாட்சிக்குள் நுழைய, எந்த இழப்புக்கும் தயாராக வேண்டும் - மாற் 9:47.
  • வேத அறிவு உடையவன், இறையாட்சிக்கு தொலைவில் இல்லை – மாற் 12:28-34.
  • இறையாட்சியை எதிர்பார்த்திருப்பவரே, இயேசுவின் சீடர் - மாற் 15:43.
  • இறையாட்சிக்காக ஜெபிக்க வேண்டும் - மத் 6:10.
  • இறையாட்சியில் சிறியவர், திருமுழுக்கு யோவானை விட பெரியவர் - லூக் 7:28.
  • இறையாட்சி, இவ்வுலகை சார்ந்தது அல்ல – யோவா 18:36.
  • உயிர்த்த இயேசு, நாற்பது நாட்கள், தம் சீடர்களுக்கு இறையாட்சியைப் பற்றி விளக்கினார் - தி.ப 1:3.

  "யாருக்கு இறையாட்சி இல்லை"

  • ஆவியின் கனிகளின்றி வாழ்பவனுக்கு, இறையாட்சி இல்லை - மத் 21:43.
  • செல்வத்தை நம்பியிருப்பவர்களுக்கு, இறையாட்சி இல்லை – மாற் 10:24.
  • கலப்பையில் கை வைத்தபின், திரும்பி பார்ப்பவனுக்கு இறையாட்சி இல்லை – லூக் 9:62.

  "7. நிலைவாழ்வு"

  • திருமுழுக்கால், திருச்சபையின் உறுப்பினரான ஆவிக்குரிய விசுவாசி, நிலைவாழ்வை இவ்வுலகிலேயே வாழ ஆரம்பிக்கிறார்.

  "நிலைவாழ்வு பற்றிய இயேசுவின் உபதேசங்கள்"

  • கட்டளைகளை கடைபிடிப்பவர்க்கு நிலைவாழ்வு – லூக் 18:20.
  • இயேசுவின் பொருட்டு எதையும், துறப்பவனுக்கு நிலைவாழ்வு – மத் 19:29.
  • கிறிஸ்துவை விசுவசிப்பவனுக்கு நிலைவாழ்வு கிடைக்கும் - யோவா 3:14,36.
  • இறை ஆவியைப் பெற்றால், நிலைவாழ்வு கிடைக்கும் - யோவா 4:14.
  • இறைவார்த்தையை கேட்டு, பிதாவை விசுவசித்தால், நிலைவாழ்வு கிடைக்கும் - யோவா 5:24.
  • மறைநூலை தியானிப்பவர்க்கு நிலைவாழ்வு உண்டு – யோவா 5:39.
  • கிறிஸ்து, நிலைவாழ்வை அளிக்கிறார் - யோவா 10:28.
  • கடவுளின் கட்டளையே, நிலைவாழ்வு தரும் - யோவா 12:50.
  • கிறிஸ்துவிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நிலை வாழ்வு உண்டு – யோவா 17:2.
  • கடவுளையும், கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு – யோவா 17:3.
  • நிலைவாழ்வுக்காக உழைக்க வேண்டும் - யோவா 6:27.
  • கிறிஸ்துவை விசுவசிக்கும் யாவரும், நிலைவாழ்வைப் பெற வேண்டும் என்பது, கடவுளின் விருப்பம் - யோவா 6:40.

  "இப்போதனைகளால் இயேசு ஸ்தாபன சபையை, ஆவிக்குரிய சபையாக மாற்றினார்"

  • ஸ்தாபன சபை, ஆவிக்குரிய சபையாக மாறுவதே, இயேசுவின் திட்டம்.
  • மேற்சொன்ன, ஏழு வித படிப்பினைகளயும் தந்து, இயேசு ஸ்தாபன சபையை, ஆவிக்குரிய பொழிதலைப் பெற ஆயத்தப்படுத்தினார்.
  • இவ்வாறு, ஆயத்தமான ஸ்தாபன சபை, பெந்தக்கோஸ்து நாளன்று, ஆவிக்குரிய சபையாக உருமாறியது – தி.ப 2:1-4,33.
  • இயேசு உருவாக்கிய ஆவிக்குரிய சபையின் தன்மைகளை கீழே காண்போம்.

  "ஆதி ஆவிக்குரிய சபை "

  "இயேசு உருவாக்கிய ஆவிக்குரிய சபையின் தன்மைகள்"

  • இயேசுவே அதை உருவாக்கினார் – தி.ப 2:33.
  • இயேசு ஆவியானவரை,ஆவிக்குரிய சபைக்கு வாக்களித்தார் - யோவா 16:7-13.
  • ஆவியானவருக்காக,காத்திருக்க ஆவிக்குரிய சபைக்கு,கட்டளையிட்டார் - லூக் 24:49.
  • ஆவிக்குரிய சபையில்,காத்திருந்த ஆதி சீடர் மீது,ஆவியைப் பொழிந்தார் - தி.ப 2:33 ; 2:1,2.
  • ஆவிக்குரிய சபையில்,திருத்தூதர் ஆவியானவரால்,நிரம்பி போதித்தனர் - தி.ப 2:14-41; 4:31 ; 4:8.
  • ஆவிக்குரிய சபையில்,திருத்தூதர்,ஆவியினால் நிரம்பி,புதுமைகள் செய்தனர் - தி.ப 3:1-10; 5:15-16.
  • ஆவிக்குரிய சபையில்,திருச்சபையின் தலைவர்,ஆவிக்குரிய பேதுருவாக இருந்தார் - தி.ப 2:14.
  • ஆவிக்குரிய சபையில்,திருத்தூதர் இருந்தனர் - தி.ப 6 :2.
  • ஆவிக்குரிய சபையில்,ஆவியானவரின் வழிநடத்தல் இருந்தது - தி.ப 13 :2 ; 4 :23-31.
  • ஆவிக்குரிய சபையில்,இயேசு,திருத்தூதர்களை உறுதிப்படுத்தி,திடப்படுத்தினார் - தி.ப 18 :9,10.
  • ஆவிக்குரிய சபையில்,திருப்பணிகள்,சிறப்பாக நடந்தன - தி.ப 11:24; 2:42-47; 4:32-37.
  • ஆவிக்குரிய சபையில்,திருச்சங்கங்கள் நடந்தன - தி.ப 15:1-35.
  • ஆவிக்குரிய சபையில்,மக்கள் கூட்டம் இருந்தது - தி.ப 11:21.
  • ஆவிக்குரிய சபையில்,சீடர்கள் இருந்தார்கள் - தி.ப 14:20.
  • ஆவிக்குரிய சபையில்,ஞானஸ்நானம் (திருமுழுக்கு) நடந்தது - தி.ப 2:41; 10:44-48.

  "ஆதி ஆவிக்குரிய திருச்சபையின் சில சிறப்பு அம்சங்கள்"

  "பேதுரு"

  • ஆவிக்குரிய சபையில்,திருச்சபையின் தலைவராகிய பேதுரு,ஆவியின் பொழிதலைப் பெற்றவர் - தி.ப 2:4; 4:8; 10:47.
  • ஆவிக்குரிய சபையில்,பேதுரு,இயேசுவுக்காக,எந்த பாடுகளையும் ஏற்க தயாரானவர் - தி.ப 5:17,18 ; 12:6.
  • ஆவிக்குரிய சபையில்,பாடுகளைப் பேதுரு,மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார் - தி.ப 5:40,41.
  • ஆவிக்குரிய சபையில்,பேதுரு ஆவியானவரால் நிரம்பப்பெற்று,இயேசுவுக்கு சான்றுபகர,போதித்தார் - தி.ப 4:8.
  • ஆவிக்குரிய சபையில்,பேதுரு அனேக மக்களை,இயேசுவுக்கு சீடராக்கினார் - தி.ப 4:4; 2:41.

  "திருத்தூதர்"

  • ஆவிக்குரிய சபையில்,திருத்தூதரான பவுல்,பர்னபா,சீலா,பிலிப்பு,ஸ்தேவான்,போன்றவர்கள்,ஆவியால் நிரம்பி,திருப்பணி ஆற்றினர் - தி.ப 6 :5-6 ; 16 :25-34.
  • ஆவிக்குரிய சபையில்,திருத்தூதர்,பாடுகளையும்,மரணத்தையும்,மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டனர் - பிலி 1:19-21.
  • அவர்கள்,அரசின் நெருக்கடி,யூதர்களின் எதிர்ப்பு,சதிகள்,தந்திரம்,அனைத்துக்கும், ஈடுகொடுத்து,இரவும் பகலும் உழைத்தனர் - 2கொரி 11:23-31.
  • மேலும்,அவர்கள் உலகின் கடை எல்லைவரைக்கும் சென்று,அனேக மக்களை சீடராக்கினர் - தி.ப 8:26-31.

  "ஆவிக்குரிய விசுவாசிகளின் கூட்டம்"

  • ஆவிக்குரிய சபையில்,விசுவாசிகள்,இறைவார்த்தையை அல்லும் பகலும்,தியானித்தனர் - தி.ப 17 :11.
  • ஆவிக்குரிய சபையில்,விசுவாசிகள் ஆவியானவர் அருளியபடி,“அன்பு சமூகம்” உருவாக்கினர் - தி.ப 2:42-47.
  • ஆவிக்குரிய சபையில்,விசுவாசிகள் இறை சித்தத்தை நிறைவேற்ற,இரத்த சாட்சியாகவும் துணிந்தார்கள் - தி.ப 7 :54-60.
  • மேலும்,அவர்கள் சென்ற இடமெல்லாம்,வேத சத்தியங்களை மக்களுக்கு சொல்லி, மக்களை மனம் திருப்பி,இரட்சிப்பை தந்து,அபிஷேகித்தார்கள் - தி.ப 2:37,38 ; 8:4-6.
  • ஆவிக்குரிய சபையில்,இயேசு எப்போதும் விசுவாசிகளோடு உடனிருந்தார் - மத் 28:20 ; மாற் 16 :20.

  "ஆதி ஆவிக்குரிய சபையில் திருமுழுக்கு"

  • ஆவிக்குரிய சபையில்,1. நற்செய்தி அறிவித்து,2. மக்களை சீடராக்கி,3. பின்பு தந்தை, மகன்,தூய ஆவிக்குள் மூழ்கி,“மீட்பும்,அருட்பொழிவும்” பெற்று,“தண்ணீர் திருமுழுக்குச் சடங்கால்”,சபையில் சேர்க்கப்பட்டனர் - மத் 28:19,20 ; தி.ப 2:41,47.
  • ஆவிக்குரிய சபையில்,போதனை,மீட்பு,அருட்பொழிவு,பெற்ற பின்பே,சபையிலே சேர்க்கும் “தண்ணீர் திருமுழுக்குச் சடங்கு” நடைபெற்றது - தி.ப 10:44-48.
  • அதாவது,ஆதி ஆவிக்குரிய சபையில்,முதலில் போதனையும்,அதை ஏற்றுக்கொண்டவர்களுக்கு,“மனஸ்தாபம்”,“மனம்திரும்புதல்”,“பாவ மன்னிப்பு”,“அருட்பொழிவு” ஆகிய அனைத்து அனுபவங்களும்,கிடைத்த பின்பே,சபையில் சேர்க்கும் “தண்ணீர் திருமுழுக்குச் சடங்கு” நடைபெற்றது - தி.ப 2:14,37,41,38 ; எபே 1:7.

  "இன்றைய ஸ்தாபன சபைகள், ஆவிக்குரிய சபைகளாக மாறும் நாளை நோக்கி, காத்திருந்து ஜெபிப்போம்! உழைப்போம்!"


  "ஆவிக்குரிய திருச்சபைக்கு, பைபிள் கூறும் பல பெயர்கள்"

  • தூயவர் குழு – பரிசுத்தர் சபை – தி.பா 89:7.
  • நீதிமான்களின் மன்றம் - செம்மையானவர்களின் சங்கம் - தி.பா 111:1.
  • கிறிஸ்துவின் உடல் - உரோ 12:5.
  • மரக்கிளை – ஏசா 60:21.
  • மணவாட்டி – வெளி 21:9.
  • பரலோக குடும்பம் - எபே 3:15.
  • கடவுளின் மந்தை – எசா 40:11.
  • பரலோகத்தில் பெயர் எழுதப்பட்டவர்களின் கூட்டம் - எபி 12:23.
  • கடவுள் பண்படுத்தும் தோட்டம் - தேவனின் பண்ணை – 1கொரி 3:9.
  • கடவுள் எழுப்பும் கட்டடம் - தேவனின் மாளிகை – 1கொரி 3:9.
  • ஆண்டவரின் தூயகோவில் - கர்த்தரின் பரிசுத்த ஆலயம் - எபே 2:21.
  • கடவுளின் உறைவிடம் - தேவனின் வாசஸ்தலம் - எபே 2:22.
  • விண்ணக எருசலேம் - எபி 12:22.
  • பரிசுத்தநகர் - வெளி 21:2.
  • கடவுளின் வீடு – 1திமொ 3:15, எபி 10:21.
  • இறைமக்கள் சமுதாயம் - எபே 2:19.
  • கடவுளின் குடும்பம் - தேவனுடைய வீட்டார் - எபே 2:19.
  • கடவுளின் மக்களாகிய இஸ்ராயேலர் - தேவனின் இஸ்ராயேலர் - கலா 6:16.
  • ஆட்டுக்குட்டியின் மணமகள் - ஆட்டுக்குட்டியின் மனைவி – வெளி 19:7.
  • புதிய எருசலேம் - வெளி 21:2.
  • உண்மைக்கு தூணும், அடித்தளமும் - சத்தியத்துக்கு தூணும் ஆதாரமும் - 1திமொ 3:15.
  • வாழும் கடவுளின் சபை – ஜீவனுள்ள தேவனின் சபை – 1திமொ 3:15.
  • ஆவிக்குரிய இல்லம் - ஆவிக்கேற்ற மாளிகை – 1பேது 2:5.
  • கடவுளுடைய கோவில் - தேவனின் ஆலயம் - 1கொரி 3:16.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட இனம்.
  • அரச குருத்துவ திருக்கூட்டம்.
  • பரிசுத்த குலம் 1பேது 2:9.
  • கடவுளின் மக்கள்.

 
 
 
copyrights © 2012 catholicpentecostmission.com