"CPM - பாடல்கள்"

Song - 1

எம் கனவுகளெல்லாம்


எம் கனவுகளெல்லாம் நனவுகளாகும் காலம் வந்ததே

எம் தேவன் தந்த வாக்குத்தத்தம் நிறைவேறுதே

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

ஹலே அல்லேலூயா (3)


சரணங்கள்


1 . துன்ப வேளையில் என்னை அழைப்பீர் துணையாய் வந்திடுவேன்

உங்கள் துன்பம் நீக்கிடுவேன்

சொன்னவர் வாக்கு நிறைவேறும் என்பது

என்றும் சத்தியமே

எங்கள் வாழ்வே சாட்சியமே


2 . இருவர் மூவர் கூடி ஜெபித்தால் கூடே இருந்திடுவேன்

உங்கள் ஜெபத்தை கேட்டிடுவேன் -

சொன்னவர் வாக்கு ..........


3 . விசுவாசப் பாறையில் கட்டிய வீட்டை வெள்ளம் மோதிடலாம்

ஆனால் அழிக்க முடியாது

சொன்னவர் வாக்கு ..........


4 . பாடுகள் வேதனை தேவனின் பிள்ளைக்கு அழிவுக் கென்றல்ல

ஆனால் புடமிடும் சோதனையே

சொன்னவர் வாக்கு ..........


5 . கிடைப்பது வரையில் கேட்பவனுக்கு எல்லாம் கைக்கூடும்

தேவ சித்தம் நிறைவேறும்

சொன்னவர் வாக்கு ..........


6 . மலைகள் பெயரும் குன்றுகள் அசையும் வார்த்தை மாறாது

எந்தன் அன்போ அழியாது

சொன்னவர் வாக்கு ..........


7 . நம்பினவர் ஜெபம் என்றும் கேட்பேன் ஜெயத்தை தந்திடுவேன்

மீட்டு பெருமைப்படுத்திடுவேன்

சொன்னவர் வாக்கு ..........


 


Song - 2

முட்டுக் காஞ்சா மோட்சம்


முட்டுக் காஞ்சா மோட்சம் போகலாம்

மூளையிலே இருத்திக்கோ தம்பி

இருக்கும் காலத்தில் இங்கே மோட்சம்

இறந்த பின்னாலே அங்கே மோட்சம்


சரணங்கள்


1 . ராத்திரியிலே இயேசு மலைக்கு போனாரு

முழங்காலில் நமக்காக மன்றாடினாரு

நித்திரயில் நாம அயர்ந்து போகாம

விழிப்போடே முழங்காலில் ஜெபிக்க சொன்னாரு


2 . விடியற்காலத்தில் இயேசு ஆலயம் போனார்

வேண்டுதல்கள் செய்து நமக்காக ஜெபித்தார்

காலை தூக்கத்தில் நாம மயங்கி போகாம

கருக்கலோடே ஜெபம் செய்ய கற்றுத் தந்தாரு


3 . கெத்சமெனியில இயேசு ஜெபிக்க போனாரு

கண்ணீரோட முழங்காலில் மன்றாடினாரு

சோதனையில் நாம வாடிடும் போது

சோர்ந்திடாம முழங்காலில் ஜெபிக்க சொன்னாரு


4 . அத்தனை பேர்க்கும் அப்பம் கொடுத்த வேளையில்

அப்பாவை நோக்கி இயேசு ஜெபம் செய்தாரு

சாப்பிடும் முன்னே நாம ஞாபகத்தோடே

முழங்காலில் ஜெபம் செய்ய புத்தி சொன்னாரு


5. கல்லறை முன்னே இயேசு ஜெபம் செய்தாரு

லாசருக்கு மீண்டுமாய் உயிர் தந்தாரு

ஊழியத்தில நாம புதுமைகள் செய்ய

உபவாசத்தோடு ஜெபம் செய்ய சொன்னாரு


 


Song - 3

பரவசமாகி நான் ஜெபிக்கையிலே


பரவசமாகி நான் ஜெபிக்கையிலே – பர

லோகத்தின் அதிசயம் காண்கிறேன் தேவா


சரணங்கள்


1. முழங்கால் படியிட்டு நிற்கையிலே – முக

மலர்ச்சியோடே நான் ஜெபிக்கையிலே

முதல்வா முன்னவா உம் முகம் காண்கின்றேன்

மாறா மகிழ்ச்சியில் திளைக்கிறேன் தேவா


2. ஸ்தோத்திர பலியிட்டு துதிக்கையிலே – திரு

அடிகளைத் தொழுது வணங்கையிலே

அருளே பொருளே உம் குரல் கேட்கின்றேன்

ஆனந்தக் களிப்பில் ஆழ்கிறேன் தேவா


3. எல்லாம் மறந்தும்மை அழைக்கையிலே - இக

வாழ்வினைத் துறந்தும்மை நினைக்கையிலே

ஆருயிரே உந்தன் பிரசன்னமே காண்கிறேன்

அற்புத ஒளியினில் மூழ்குகிறேன் தேவா


 


Song - 4

அல்லேலூயா ஸ்தோத்திரம்


அல்லேலூயா ஸ்தோத்திரம் பாடிடுவோம்

ஆராதித்தேசுவை போற்றிடுவோம்


சரணங்கள்


1. பாவத்தை போக்கிடும் பரிசுத்த தேவனை

அபிஷேகம் செய்திடும் திவ்ய சொரூபனை


2. பந்தம் பாசம் என்று பக்கத்தில் நிற்போனை

சொந்தம் எனக்கென்று தந்தையாய் வந்தோனை


3. நிந்தை படும் வேளை விந்தைகள் செய்வோனை

தந்தை என்றே சொல்லி பிள்ளையாய் காப்போனை


4. திரும்பிய திசையெல்லாம் தெய்வமாய் நின்றோனை

விரும்பிய போதெல்லாம் வள்ளலாய் தந்தோனை


5. தாழ்வுற்ற வேளையில் தயவோடு காப்போனை

துன்புற்ற நேரத்தில் தாங்கிடும் குமரனை


 


Song - 5

கைகள் கொட்டுவோம்


கைகள் கொட்டுவோம் தாளம் தட்டுவோம்

ஒன்று சேர்ந்து போற்றுவோம்

அன்னை மாமரி வாழ்வின் மாதிரி

என்று சொல்லி பாடுவோம்

துதி மங்களங்கள் சொல்வோம் - 2


சரணங்கள்


1. கலிலேயாவிலே நாசரேத்துவில்

வானதூதர் வந்தார்

கன்னியான மரியாளின் வீட்டிலே

தேவ செய்தி சொன்னார்

உலக மீட்பராம் இயேசுவை

தம் வயிற்றின் கருவிலே சுமந்திட்டார்

அன்னை மாமரி அருள் நிறைந்தவள்

வாழ்க வாழ்க என்றே


2. கானாவூரிலே மணவிருந்தினில்

மரியும் மகனும் சென்றார்

மண விருந்தினில் இரசம் தீர்ந்ததால்

பரிந்து பேசி நின்றார்

இயேசு மைந்தனின் மீட்பின் பணியினை

மரியாள் தொடங்கி வைத்தார்

அன்னை மாமரி ........................


3. கொல்கொத்தாவிலே மகனின் பாடிலே

சிலுவையடியில் நின்றார்

ஆலயத்தில் ஆவிக்காகவே

காத்திருந்து ஜெபித்தார்

பெந்தக்கோஸ்து என்னும் பெருநாளில்

அபிஷேகம் பெற்று மகிழ்ந்தார்

அன்னை மாமரி ........................


 


Song - 6

மகனே மகளே மனம்திரும்பு


மகனே மகளே மனம்திரும்பு

மன்னவன் இயேசுவிடம் திரும்பு


சரணங்கள்


1. தெய்வத்தைப் பார்த்த கண்ணாலே

தீட்டான உலகை பார்க்காதே

இறைவார்த்தைக் கேட்ட காதாலே

இச்சையாய் எதையும் கேளாதே


2. வேதத்தை தொட்ட கையாலே

வேண்டாத எதையும் தொடாதே

முழங்காலில் நின்ற காலாலே

முரணான இடத்தில் போகாதே


3. தேவனைத் துதித்த நாவாலே

தவறான எதையும் பேசாதே

கடவுளை தியானித்த நெஞ்சாலே

கபடான எதையும் எண்ணாதே


 


Song - 7

இயேசு பாதம் வாழ்பவர்க்கு


இயேசு பாதம் வாழ்பவர்க்கு தொல்லை இல்லையே

இயேசு வாக்கை நம்பி வாழ்பவர்க்கு தோல்வி இல்லையே


சரணங்கள்


1. துன்பம் என்று வந்தவர்க்கு துன்பம் நீக்குவார் - இயேசு

தன்னை ஈந்து தன் ஜனத்தின் தீமை போக்குவார்


2. ஆபத்தில் அழைப்பவர்க்கு ஆசி நல்குவார் - இயேசு

ஆறுதல் அளித்து வந்த பாடு மாற்றுவார்


3. பெற்ற தாய்க்கு அன்பு வற்றி போவதில்லையே - இயேசு

உற்ற பிள்ளை அன்னை அன்பை அள்ளி வீசுவார்


4. பாதை எங்கும் அஞ்சுகின்ற துன்பம் நேரலாம் - இயேசு

போகும் வழி கூடே வந்து காத்து போற்றுவார்


5. அன்னையாக அன்பை ஈந்தணைத்து தேற்றுவார் - இயேசு

தன்னை நம்பி வாழ்பவர்க்கு வெற்றி நல்குவார்


 


Song - 8

நல்லவராம் இயேசுவே


நல்லவராம் இயேசுவே ஸ்தோத்ரம்

நன்மைகளால் நிறைந்தவரே ஸ்தோத்ரம்

நித்திய ஜீவிய வழிகாட்டி

நித்திய வாழ்ழை அளிப்பவரே


சரணங்கள்


1. இம்மையில் ஜனனம் அளித்தவரே - ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்

தாய் தந்தையரை ஈந்தவரே - ஸ்தொத்ரம் ஸ்தோத்ரம்

அன்பால் உணவால் பாலூட்டி வளர்த்தவரே - ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்


2. உற்றார் மற்றார் தந்தவரே - ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்

உறவுகள் நண்பர்கள் ஈந்தவரே - ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்

கல்வியளித்து அறிவூட்டி வளர்த்தவரே - ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்


3. எழிலைத் தொழிலை தந்தவரே - ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்

தங்கிட இல்லம் தந்தவரே - ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்

வேலையளித்து வலுவூட்டி வளர்த்தவரே - ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்


4. நோய்களில் மருந்தாய் வந்தவரே - ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்

சோதனை வேளையில் காத்தவரே - ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்

வேதனை தீர்த்து திடமூட்டி வளர்த்தவரே - ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்


5. பாவம் சாபம் சூழ்கையிலே - ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்

பரிவோடு வந்து மீட்டவரே - ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்

பெலவீனத்தில் பெலமூட்டி வளர்த்தவரே - ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்


 


Song - 9

மன்னியும் இயேசுவே


மன்னியும் இயேசுவே – என்னை

மன்னியும் இயேசுவே


சரணங்கள்


1. உம்மோடு நான் செய்த ஒப்பந்தமெல்லாம்

உதறி தள்ளி விட்டேன்

வேண்டாம் என்றும் பாவம் வேண்டாமென்றிருந்தேன்

மீண்டும் விழுந்திட்டேன்


2. உலகம் மாமிசம் பிசாசுக்கடிமையாய்

உம்மை புறக்கணித்தேன்

பாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர்

பார்த்தும் மறுதலித்தேன்


3. இம்முறை மன்னித்தேன் இனி பாவம் செய்யாதே

என்றீரே இயேசய்யா

மனஸ்தாபக் கண்ணீர் காய்ந்திடும் முன்பே

மீண்டும் பாவியானேன்


4. வாத நோயாளியும் நல்ல கள்ளனும்

மன்னிப்பைப் பெற்றாரே

பாவியானப் பெண் பெற்றிட்ட மன்னிப்பை

எனக்கும் தாருமையா


 


Song - 10

இறைவா நான் உமக்காக


இறைவா நான் உமக்காக வாழ்கிறேன்

இறைவா நான் உம்மையே சேவிக்கின்றேன்

நோயின் பிடியினின்று என்னை காத்தீர்

சாவின் பிடியினின்று என்னை மீட்டீர்


சரணங்கள்


1. என் வாழ்வின் காலமே , பாதாளத்தின் வாயிலுக்கு போக வேண்டுமே

நான் வாழும் நாட்களோ வாழும் போதே என்னை விட்டு நீங்கிப் போகுதே

வாழ்வோரின் நாட்டை இனி காண முடியாதே

வையத்தின் குடிகளை பார்க்க முடியாதே

இறைவா, இறைவா, இறைவா


2. என் இருப்பிடமோ இடையரின் கூடாரம் போல் பெயர்க்கப்படும்

நான் நெசவாளன் போல் தறி நின்று சுருட்டி வெட்டப்படுவேன்

காலை முதல் மாலை வரை என்னை வதைக்கின்றீர்

மாலை முதல் காலை வரை கதறி அழுகின்றேன்

இறைவா.............................


3. என் மனக்கசப்பை மீட்பாக மாற்றி குழி நின்று காத்தீரே

என் பாவங்கள் எல்லாம் போக்கி என்னை சாவினின்று மீட்டுக் காத்தீரே

என் நாவோ அவர் செய்த மீட்பை பறைசாற்றுமே

என் நெஞ்சம் ஆலயத்தில் பாசுரங்கள் பாடுமே

இறைவா.............................


4. நான் சிங்கத்தை போல எலும்புகள் முறிபட்டு நொறுங்குகிறேன்

நான் குருவி குஞ்சாய் புறாவைப் போல் கத்துகிறேன் விம்முகின்றேனே

அண்ணாந்து பார்த்து எந்தன் கண்கள் மெலிகின்றதே

சொல்லொண்ணா துயரத்தில் வேதனையில் வாடுதே

இறைவா.............................


 


Song - 11

நீ ஒருவன் மட்டும்


நீ ஒருவன் மட்டும் மீட்படைந்தால்

உன்னையும் உலகையும் மீட்டிடலாம்

ஹலேலூயா ஹலேலூயா

ஓசான்னா ஓசான்னா ஹலேலூயா


சரணங்கள்


1. சோதோம் கொமோரா அழிவதில்லை

ஒரே ஒரு நீதிமான் இருந்திருந்தால்

மீட்படைவாய் மீட்பளிப்பாய்

மீட்படைவாய் மகனே மீட்பளிப்பாய்


2. குடும்பத்தில் யாவரும் மீட்கப்பட்டனர்

நோவா என்ற ஒரு நீதிமானால்

மீட்படைவாய் ............................


3. சக்கேயுவின் வீடு மீட்கப்பட்டதே

சத்தியத்தின் தேவனை ஏற்றுக்கொண்டதால்

மீட்படைவாய் ............................


2. பரிசுத்தவான்களின் கூடாரத்தில்

மகிழ்ச்சியின் எக்காளம் தொனிக்கின்றது

மீட்படைவாய் ............................



 
 
 
copyrights © 2012 catholicpentecostmission.com