"திருமுழுக்கும் பாவ சாபமும்"Rev.Fr.R.John Joseph
மையக்கருத்து:

ஒருவர் “பாவ சாபம்” நீங்கி வாழ, அவர், மீட்படைந்து, அருட்பொழிவு பெற்று, திருமுழுக்கால், இயேசுவின் உடலாகிய தேவ சபையில், உறுப்பாக மாற வேண்டும்.

I. துன்பமும் மனிதனும்:


முகவுரை:

 • மனிதன் இவ்வுலகில் துன்புறுவதற்கென்றே பிறக்கிறான் - யோபு 5:7.
 • எனவே, துன்பம் தன்னிலேயே தீமை அல்ல.

 • ஆனால், துன்பம் எப்போது தீமையாகிறது?
 • துன்பத்தை நீக்கும் மனிதனின் முயற்சிகள், ஆசீர்வதிக்கப் படாமலிருக்கும் போது.

 • ஆசீர்வதிக்கப்படாத முயற்சிகளுக்கு என்ன பெயர்?
 • சாபம்.


II.பாவத்தின் விளைவு சாபம்:


 • பொதுவாக, துன்பங்களுக்கான காரணம் என்ன?
 • நம்முடைய “பாவங்களே”, துன்பங்களுக்கான காரணம் - உரோ 6:23, தொ.நூ 3:1-6, 14,19.

 • பாவம் என்பது என்ன?
  • கடவுள் விரும்புவதை செய்யாமலிருப்பது பாவம்.
  • கடவுள் விரும்பாததை செய்வது பாவம் - தொ.நூ 2:16, 17, 3:1-6, 1யோவா 3:4.

 • துன்பங்கள் எத்தனை வகை?
 • 1. தீரும் துன்பங்கள், 2. தீராத துன்பங்கள் - என, இரண்டு வகை துன்பங்கள் உள்ளன.


 • தீரும் துன்பங்கள் என்பது என்ன?
  • நம்முடைய முயற்சிகள், ஆசீர்வதிக்கப்படுவது – தீரும் துன்பங்கள்.
  • (உ.ம்) – ஆபிரகாம் லோத்தை மீட்டல் - தொ.நூ 14:14-16.

 • தீராத துன்பங்கள் என்பது என்ன?
  • நம்முடைய முயற்சிகள், ஆசீர்வதிக்கப்படாதது – தீராத துன்பங்கள்.
  • (உ.ம்) – மருத்துவம் செய்தும், விடுதலை அடையாத, இரத்தப்போக்குடைய பெண் - மாற் 5:25,26.

 • தீராத துன்பத்துக்கு இன்னொரு பெயர் என்ன?
 • சாபம் - இ.ச 11:26.

 • சாபம் எப்படி வந்தது?
 • பாவத்தின் விளைவே சாபம்.

  • பாவத்தின் சம்பளம் சாவு – உரோ 6:23.
  • பாவம் செய்ததால்- நிலம் சபிக்கப்படும் - தொ.நூ 3:17.
  • கடவுளின் விருப்பங்களை மீறுவதால் - சாபம் வரும்- இ.ச 28:15.


III. சாபம் நீங்க வழி என்ன?

பகுதி – A

 • இயேசு கிறிஸ்துவை விசுவசிக்க வேண்டும்.
 • (உ.ம்) - இரத்தப்போக்குடைய பெண்ணிடம், இயேசு, “உன் விசுவாசம், உன்னைக் குணமாக்கிற்று” என்றார் - மத் 9:22.

 • இயேசுவை எப்படி விசுவசிக்க வேண்டும்?
 • இயேசுவால், “சாபம் நீக்க முடியும்” என்று, விசுவசிக்க வேண்டும் - தொ.நூ 18:13, மத் 9:27-29.


பகுதி – B

 • ஒருமுறை நீங்கிய சாபம், மீண்டும் வருமா?
 • ஆம், மீண்டும் வரும். (உ.ம்)

  • எசேக்கியாவுக்கு நோய் நீங்கியது – 2குறி 32:24.
  • அவர் மீண்டும் பாவம் செய்தார் - 2குறி 32:25.
  • கடவுள் மீண்டும் கைவிட்டார் - 2குறி 32:26,31.

 • ஆனால், சாபம் என்றென்றைக்கும் நீங்க, என்ன செய்ய வேண்டும்?
 • “பாவம்”, என்றைக்குமாய், நம்மில் நீங்க வேண்டும் - யோவா 5:14.


IV. இயேசு பாவம் நீக்கி, சாபம் தீர்ப்பவர்:

 • மனிதகுல பாவ சாபம் நீங்க, இயேசு என்ன செய்தார்?
  • மனிதகுல சாபத்தை, தானே ஏற்று, மனிதனை சாபத்தினின்று “விடுவிக்க, இயேசு வந்தார் - எசா 53:3-5, லூக் 4:18.
  • மனிதகுல பாவத்தை, தானே ஏற்று, மனிதனை பாவத்தினின்று “மீட்க” இயேசு வந்தார் - எசா 53:6,12, 1திமொ 1:15.

 • நாம் பாவ சாபத்தினின்று விடுதலை பெற, இயேசு காட்டிய வழி என்ன?
  • மனிதனுடைய சாபம், அவனுடைய பாவத்தால் வந்ததென்று, இயேசு காட்டினார். (உ.ம்) – முடக்குவாதக்காரனை விடுவித்த நிகழ்ச்சி – மத் 9:1-7.
  • “இனிமேல், பாவம் செய்யக்கூடாது” என்று, இயேசு கூறினார்.
  • 38 ஆண்டுகள் நோயாளியாயிருந்தவனை விடுவித்த போது, இயேசு கூறினார் - யோவா 5:5-9,14.
  • பாவியான பெண்ணை விடுவித்த போது, இயேசு கூறினார் - யோவா 8:1-11.
  • சீராக்கின் உபதேசம் கூறுகிறது – சீரா 21:1,2.

 • பாவிக்கும், பரிசுத்தவானுக்கும் உள்ள, வேறுபாடு என்ன?
  • “பாவி”, தன் குற்றங்களை நியாயப்படுத்திக் கொண்டேயிருப்பவன்.
  • “பரிசுத்தவான்”, தன் குற்றங்களுக்காக, வருந்தி, பொறுத்தல் கேட்டுக்கொண்டிருப்பவன்.


V. பாவ சாபம் நீங்க, வேதம் காட்டும் வழி என்ன?


பகுதி – A

 • யார் பாவம் செய்ய முடியாது?
  • “கடவுளுடைய பிள்ளை”, பாவம் செய்ய முடியாது –1யோவா 3:9.
  • “இயேசு கிறிஸ்துவோடு இணைந்திருப்பவர்”, பாவம் செய்வதில்லை – 1யோவா 3:6.

 • கடவுளுடைய பிள்ளை, ஏன் பாவம் செய்ய முடியாது?
  • கடவுளுடைய “இயல்பு”, அவரிடம் இருக்கிறது – 1யோவா 3:9.
  • கடவுளுடைய “பாதுகாப்பு”, அவருக்கு கிடைக்கிறது – 1யோவா 5:18.

 • ஒருவர், கடவுளுடைய பிள்ளையாவது எப்படி?
  • “மீட்படையும் போது”, ஒருவர் கடவுளுடைய பிள்ளையாகிறார் - யோவா 1:12.
  • “ஆவியானவரைப் பெறும் போது”, ஒருவர் கடவுளுடைய பிள்ளையாகிறார் - உரோ 8:14-16.


A. மீட்பை பெற வேண்டும்

எல்லா மனிதரும் மீட்படைய வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் - 1திமொ 2:4.

 • இந்த திட்டத்தை (விருப்பத்தை) நிறைவேற்ற, “கடவுள்” என்ன செய்தார்?
  • தன் ஒரேப்பேறான மகன், இயேசு கிறிஸ்துவை, கடவுள் இவ்வுலகிற்கு அனுப்பினார் - யோவா 3:17.

  “உலகிற்கு தண்டனை தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக, அதை மீட்கவே, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்” – யோவா 3:17.


 • இந்த மீட்பின் திட்டத்தை நிறைவேற்ற, “இயேசு” என்ன செய்தார்?
  • கடவுளின் மீட்பின் திட்டத்தை நிறைவேற்ற, இயேசு, நம் பாவங்களுக்குப் பரிகாரமாக தன் ஜீவனைக் கையளித்தார் - மத் 20:28.

  “இவ்வாறு மானிட மகனும், தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும், பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” – மத் 20:28.


 • கடவுளுடைய மீட்பின் திட்டம் நிறைவேற, இயேசு கொண்டு வந்த “மீட்பை”, நான் பெற்றுக்கொள்ள, “நான்” என்ன செய்ய வேண்டும்?
  • நான், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவசிக்க வேண்டும் - தி.ப 16:30,31.

  “பெரியோரே! மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்? என்று சிறைக்காவலன், பவுல் சீலாவிடம் கேட்டார். அதற்கு அவர்கள், ‘ஆண்டவராகிய இயேசுவின் மேல் விசுவாசம் கொள்ளும். அப்பொழுது நீரும், உன் வீட்டாரும் மீட்படைவீர்கள்’ என்றார்கள் - தி.ப 16:30,31.


 • நான் மீட்பை பெற, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை, எப்படி விசுவசிக்க வேண்டும்?
  • இயேசு கிறிஸ்துவை, என் “இரட்சகராக ஏற்றுக்கொண்டு” விசுவசிக்க வேண்டும் - 2கொரி 5:15.

  “வாழ்வோர், இனி தங்களுக்கென வாழாமல், தங்களுக்காக இறந்து உயிர் பெற்றெழுந்தவருக்காக வாழ வேண்டும் என்பதற்காகவே, அவர் அனைவருக்காகவும் இறந்தார்” – 2கொரி 5:15.

 • இயேசு கிறிஸ்துவை விசுவசித்தால், எனக்கு என்ன கிடைக்கும்?
  • கடவுளுக்கு பிள்ளையாகும் உரிமை – யோவா 1:12.
  • நித்திய ஜீவன் - யோவா 3:15.
  • மீட்பு - தி.ப 16:31, யோவா 3:16.

நான் இயேசு கிறிஸ்துவை, என் மீட்பராக விசுவசித்து ஏற்றுக்கொள்ள, இயேசு எனக்கு என்ன செய்தார்?

எனது நிலை:

 • நான் பிறப்பால் ஒரு பாவி – தி.பா 51:5.
 • “தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன். பாவத்தோடே என் அன்னை என்னை கருத்தாங்கினாள்” தி.பா 51:5.

 • நான் பாவ சார்புடையவன் - உரோ 3:12,23, 7:20.
 • “எல்லாரும் நெறிபிறழ்ந்தனர். ஒருமிக்க கெட்டுப்போயினர். நல்லது செய்பவர் யாருமில்லை” உரோ 3:12.

  “எல்லாருமே பாவம் செய்து, கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்” – உரோ 3:23.

  “நான் விரும்பாததை செய்கிறேன் என்றால், அதை நானாக செய்யவில்லை. என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது” – உரோ 7:20.

 • நான் ஒரு பெலவீனன் - உரோ 7:21 -25, 7:18, 6:19.
 • “வலுவற்ற என் ஊனியல்பில், நல்லது எதுவும் குடிகொண்டி ருக்கவில்லை என, எனக்குத் தெரியும்” – உரோ 7:18.

  “நீங்கள் வலுவற்றவர்கள் என்பதை மனதில் கொண்டு, எளிய முறையில் பேசுகிறேன்” - உரோ 6:19.

  “என் ஊனியல்பினால், பாவத்தின் சட்டத்திற்கு கட்டுப்பட்டிருக்கிறேன்” – உரோ 7:25.

 • நான் பாவத்திற்கு அடிமைப்பட்டிருப்பவன் - உரோ 7:14.
 • “நான் ஊனியல்பினன். பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவன்” – உரோ 7:14.


பாவமும் - தண்டனையும் - மனித முறைப்பாடும்:

 • இந்த உலகில் எல்லா பாவங்களுக்கும் தண்டனை உண்டு – உரோ 6:23, உரோ 2:5,6, 2கொரி 5:10.
 • “பாவத்திற்கு கிடைக்கும் கூலி சாவு” – உரோ 6:23.

  “உங்களுக்கு வரப்போகும் தண்டனையை சேமித்து வைக்கிறீர்கள். ஒவ்வொருவருக்கும், அவரவர் செயல்களுக் கேற்ப, கடவுள் கைம்மாறு செய்வார்” – உரோ 2:5,6.

  “நாம் அனைவரும், கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது, உடலோடு வாழ்ந்த போது, நாம் செய்த நன்மை தீமைக்கு, கைம்மாறு பெற்றுக்கொள்ளுமாறு, ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப் படும் - 2கொரி 5:10.


 • என்னுடையவையும், என் முன்னோருடையவும், “பாவங்களின் தண்டனையை” கணக்கிட்டுப் பார்த்தால், அந்த “தண்டனையை அனுபவிக்கும் திறன்” எனக்கு இல்லை – தொ.நூ 4:13,14, தி.பா 130:3, 65:3.
 • “காயீன் ஆண்டவரிடம், எனக்கு கொடுக்கப்பட்ட தண்டனை, என்னால் தாங்க முடியாததாய் இருக்கின்றது” – தொ.நூ 4:13.

  “ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்?” – தி.பா 130:3.

  “எங்கள் பாவங்களின் பளுவை, எங்களால் தாங்க முடிவதில்லை” – தி.பா 65:3.


 • பாவத்தின் தண்டனை என்பதே “சாபம்” – தொ.நூ 3:17.
 • “உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக்கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால், உன் பொருட்டு, நிலம் சபிக்கப்பட்டுள்ளது. உன் வாழ்நாளெல்லாம் வருந்தி, அதன் பயனை உழைத்து நீ உண்பாய்” – தொ.நூ 3:17.


கடவுளின் செயல்:

மனித இயலாமையை உணர்ந்த கடவுள், அவன் “பாவத்தையும்” அவன் பாவத்தின் விளைவான “சாபத்தையும்” தாமே ஏற்றுக்கொண்டு, அவனுக்கு விடுதலை அளிக்க, “கடவுள்”, தன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, இவ்வுலகிற்கு அனுப்பினார் - உரோ 4:25, 3:25, 8:32.மனித இயலாமையை உணர்ந்த கடவுள், அவன் “பாவத்தையும்” அவன் பாவத்தின் விளைவான “சாபத்தையும்” தாமே ஏற்றுக்கொண்டு, அவனுக்கு விடுதலை அளிக்க, “கடவுள்”, தன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, இவ்வுலகிற்கு அனுப்பினார் - உரோ 4:25, 3:25, 8:32.

இரத்தம் சிந்தி, மனிதருடைய பாவத்துக்கு கழுவாய் ஆகுமாறு, இயேசுவை கடவுள் நியமித்தார்” – உரோ 3:25.

“நம் குற்றங்களுக்காக சாகுமாறு, கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்” உரோ 4:25.

“தம் சொந்த மகனென்றும் பாராது, அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள்” – உரோ 8:32.


இயேசு கிறிஸ்துவுடைய “மீட்பின் செயல்”:

 • அந்த “மீட்பராகிய” இயேசு கிறிஸ்து, எனக்கு வரவேண்டிய “தண்டனையை தானே ஏற்றுக்கொண்டு”, என் பாவங்களை தாமே சுமந்து, “எனக்காக பாடுபட்டு மரித்தார்” – எபி 9:28, 1பேது 2:24.
 • “கிறிஸ்துவும், பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார்” – எபி 9:28.

  “சிலுவையின் மீது, தம் உடலில் நம் பாவங்களை, அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார்” – 1பேது 2:24.


 • இவ்வாறு, என் மேல் வைத்த அன்பினால், என் ஆண்டவராகிய இயேசு, எனக்காக இரத்தம் சிந்தி, என்னை மீட்டார் - உரோ 5:6, எபே 1:7.
 • “நாம் இறைப்பற்று இன்றி, வலுவற்று இருந்த போதே, குறித்த காலம் வந்ததும், கிறிஸ்து நமக்காக, தம் உயிரைக் கொடுத்தார்” – உரோ 5:6.

  “கிறிஸ்து இரத்தம் சிந்தி, தம் அருள் வளத்திற்கு ஏற்ப, நமக்கு மீட்பு அளித்துள்ளார். இம்மீட்பால், குற்றங் களிலிருந்து நாம் மன்னிப்பு பெறுகிறோம்” – எபே 1:7.


என் பாவத்துக்கு “ஈடாக” இயேசு அளித்த“விலை”:

 • கடவுள் உங்களை “விலை” கொடுத்து மீட்டார் - 1கொரி 6:20, 7:23.
 • இயேசு, பலருடைய மீட்புக்கு “ஈடாக”, தம் உயிரைக் கொடுத்தார் - மத் 20:28, 1திமொ 2:6.
 • நமக்கு எதிரான “கடன்பத்திரத்தை” அவர் அழித்துவிட்டார் - கொலோ 2:14.
 • நாம் செய்த உடன்படிக்கைக்கு இயேசு “காப்புறுதி” அளித்தார் - எபி 7:22.
 • என்னை மீட்க, இயேசு ஏற்ற “தண்டனை” – சாவு – உரோ 4:25.


என் கடன் தீர்த்த இயேசுவுக்கு – என் கடன் என்ன?

உதாரணம்

ஓர் ஊரில், ஒரு தாயும் மகளும் இருந்தார்கள். அவர்களுக்கு, நிறைய சொத்தும் வீடும் இருந்தது. ஆனால், அந்த சொத்துக்களையெல்லாம், குடிகாரரான தகப்பன் ஈடு வைத்து, கடன் வாங்கி, குடித்து அழித்தார். இறுதியில், கடனாளியாகவே இறந்தும் போனார்.

தகப்பன் இறந்த பின், கடன்காரர்கள் வந்து, தாயையும் மகளையும் நெருக்கினர். இருந்த சொத்துக்களையும், வீட்டையும் கடன்காரர்களுக்கு அளித்து விட்டு, அவர்கள் தெருவில் அலையும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த வேளை, அவர்களின் ஊரில், நீதிமானாகிய ஒரு செல்வந்தர் இருந்தார். அவர் வெளிநாட்டில் பல ஆண்டுகள் வேலை செய்து, நிறைய சொத்து, வீடு என்று வாங்கியிருந்தார். இனி, அவர் ஒரு திருமணம் செய்து வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்.

அப்போது, கடன் நெருக்கடியில் இருந்த தாயும், மகளும், தங்கள் நிலையை, இந்த செல்வந்தரிடம் எடுத்துக் கூறினர். இதைக்கேட்ட செல்வந்தர், அவர்கள் மேல் இரக்கம் கொண்டு, தன் வீட்டையும், சொத்துக்களையும், ஈடாகக் கொடுத்து, தாய்-மகளின் சொத்துக்களையும், வீட்டையும், கடன்காரர்களிடமிருந்து மீட்க விரும்பினார். ஆனால், ஒரு நிபந்தனை:

திருமணம் ஆகாத அந்த செல்வந்தருக்கு, மகளை திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும். அவர்கள் அதை ஒத்துக் கொண்டனர். செல்வந்தர், தன் உடமையை எல்லாம், ஈடாகக் கொடுத்து, அவர்களை கடத்தினின்று “மீட்டார்”.

பதிலாக, அவர்கள் அந்த செல்வந்தரை, தங்கள் வீட்டில் ஏற்றுக் கொண்டு, அவரோடு வாழ ஆரம்பித்தனர்.


எனவே

 • மனித “பாவத்தின்” தண்டனையாகிய “சாவுக்கு” இயேசுவைக் கடவுள் ஒப்புவித்தார் - உரோ 4:25.
 • அவர் வழியாய், “தண்டனைத் தீர்ப்பிலிருந்து” தப்பி, நம்மை மீட்டுக் கொள்வோம் - உரோ 5:9.

ஆகவே

ஒருவர் மீட்படைய என்ன செய்ய வேண்டும்?

 • தம் பழைய பாவங்களை அறிக்கையிட்டு விட்டுவிட வேண்டும் - 1யோவா 1:9, சீரா 21:1,2.
 • பழைய பாவத்தினின்று மனம் மாறி, இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொள்ள வேண்டும் - கொலோ 1:14, லூக் 24:47, 1:77, எபே 1:7.
 • இயேசு கிறிஸ்துவை, மீட்பராக விசுவசிக்க வேண்டும் - தி.ப 16:30-33.
 • இயேசுவின் “மீட்புச் செயல்களின் மேல்”, விசுவாசம் கொள்ள வேண்டும் - உரோ 3:24-25.
 • விசுவசிப்பவர், இனி தமக்கென வாழாமல், தமக்கென இறந்த இயேசுவை, தம் ஒரே மீட்பராக ஏற்று, “அவருக்காக வாழ வேண்டும்” - 2கொரி 5:15.


இறுதியாக, விசுவாசத்தால் வரும் மீட்பை, ஒருவர் எவ்வாறு அடைகிறார்?

விசுவசித்து, திருமுழுக்குப் பெறுவதால் அடைகிறார் - மாற் 16:16, தி.ப 16:30-33.
B. தூய ஆவியைப் பெற வேண்டும்

“கடவுளின் ஆவியால், இயக்கப்படுபவர்களே, கடவுளின் மக்கள்” உரோ 8:14-16.

1. தூயஆவியை யார் பெற முடியும்?

 • கடவுளின் விருப்பத்திற்கு கீழ்ப்படிபவர், தூய ஆவியைப் பெறுவர் - தி.ப 5:32.
 • விசுவசிப்பவர், கடவுளின் ஆவியைப் பெறுவர் - கலா 3:14.
 • விரும்பிக் கேட்பவர், கடவுளின் ஆவியைப் பெறுவர் - லூக் 11:13.
 • மனம் மாறி, பாவமன்னிப்புப் பெற்றவர் - தி.ப 2:38.


2. தூய ஆவியைப் பெற, என்ன செய்ய வேண்டும்?

 • தூய ஆவிக்காக காத்திருக்க வேண்டும் - தி.ப 1:4, லூக் 24:49.
 • ஒருமனப்பட்டு காத்திருக்க வேண்டும் - தி.ப 1:14.
 • இடைவிடாமல், துதி செலுத்தி, காத்திருக்க வேண்டும் - லூக் 24:53.
 • பாவ வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பரிசுத்தராய் காத்திருக்க வேண்டும் - யோவே 2:28-32, தி.ப 2:17.

பகுதி – B

 • இரண்டாவதாக, யார் பாவம் செய்ய முடியாது?
  • இயேசு கிறிஸ்துவோடு இணைந்திருப்பவர், பாவம் செய்ய முடியாது – 1யோவா 3:6.

 • யார் இயேசுவோடு இணைந்திருப்பார்?
  • இயேசுவே இறைமகன் என, (மெசியா என) அறிக்கையிடுபவர் - 1யோவா 4:15.
  • கட்டளைகளைக் கடைபிடிப்பவர் - 1யோவா 3:24.
  • பிறரை அன்பு செய்பவர் - 1யோவா 4:12, 16.
  • திருமுழுக்குப் பெறுபவர் - உரோ 6:3, கலா 3:27. • எனவே, இயேசு கிறிஸ்துவோடு இணைந்திருக்க, ஒருவர் என்ன செய்ய வேண்டும்?
 • இயேசு கிறிஸ்துவை, மெசியா என ஏற்றுக்கொண்டு, கட்டளைகளைக் கடைபிடித்து, ஆவியின் கனிகளில் வாழ்ந்து, திருமுழுக்குப் பெற வேண்டும் - 1யோவா 4:15, 3:24, 4:12,16, உரோ 6:3, கலா 3:27. • திருமுழுக்கு என்பது என்ன?
  • திருமுழுக்கு என்பது, ஒருவர் இயேசுவோடு செய்து கொள்ளும், “உடன்படிக்கை” – 1பேது 3:21.
 • என்ன உடன்படிக்கை?
  • “இனிமேல், 1. இறை சத்தியங்களுக்கும், 2. சபை ஒழுங்குகளுக்கும், கட்டுப்பட்டு வாழ்வேன்” என்ற உடன்படிக்கை - 2கொரி 10:5, தி.ப 20:32.
 • இதனால் ஏற்படும் விளைவு என்ன?
  • திருமுழுக்குப் பெற்றவர், “இயேசுவோடு இணைகிறார்” - உரோ 6:3.
 • இயேசுவோடு இணைவதால் ஒருவர், இயேசுவோடு கொள்ளும் உறவு, எத்தகையது?
  • உடலும் - உறுப்பும் போன்ற உறவு – 1கொரி 12:13,27, உரோ 12:5.
  • மரமும் - கிளையும் போன்ற உறவு – யோவா 15:1-5.

 • இங்கே, இயேசுவின் உடல் என்பது என்ன? உறுப்பு என்பது என்ன?
  • இயேசுவின் உடல் என்பது – “தேவ சபை” - எபே 1:23, 5:23, கொலோ 1:24, உரோ 12:5.
  • உடலின் உறுப்புக்கள் என்பது – “விசுவாசிகள்” - 1கொரி 12:13,27.

 • எனவே, “பாவம் செய்யாதிருக்க”, ஒருவர் என்ன செய்ய வேண்டும்?
  • “கடவுளின் விருப்பத்துக்கு கட்டுப்பட்டு வாழ்வேன்” என்று, ஒருவர் இயேசுவோடு “உடன்படிக்கை செய்து”, “திருமுழுக்குப்” பெற வேண்டும்.


VI. உடன்படிக்கையும் - பாவ சாபமும்:

 • உடன்படிக்கையில், “திருமுழுக்கு” என்பது என்ன?
  • ஒரு உடன்படிக்கையின் வார்த்தையில், மூன்று காரியங்கள் உள்ளன.
  • முதலாவது உடன்படிக்கையின் “நிபந்தனை - அல்லது -கட்டளைகள்” - தொ.நூ 17:9.
  • இரண்டாவது, உடன்படிக்கையின் “வாக்குத்தத்தம்”-தொ.நூ 17:7.
  • மூன்றாவது - உடன்படிக்கைச் “சடங்கு” - விருத்தசேதனம் - தொ.நூ 17:11; திருமுழுக்கு -1பேது 3:21, கொலோ 2:11.

 • “உடன்படிக்கை வார்த்தையின்” விளக்கம் என்ன?
  • ஒவ்வொரு உடன்படிக்கையின் வார்த்தையைச் சுற்றியும், இரண்டு காரியங்கள் உள்ளன.
  • வாழ்வும் * சாவும்
  • ஆசீரும் * சாபமும் - இ.ச 16:26-28, 30:15-19.
  • நன்மையும் * தீமையும்

 • எந்த அடிப்படையில், இவை வருகின்றன?
  • வார்த்தையை “ஏற்றுக்கொள்வது” * “புறக்கணிப்பது” என்ற அடிப்படையில் - இ.ச 11:26.
  • உடன்படிக்கை வார்த்தைகளை, ஏற்று வாழ்ந்தால் - “ஆசீர்” - இ.ச 28:1-14.
  • புறக்கணித்து வாழ்ந்தால் வருவது – “சாபம்” - இ.ச 28:15.

 • எனவே, திருமுழுக்குப்பெறுபவரிடம், பாவ சாபம் இருக்குமா?
  • திருமுழுக்குப் பெறுபவர் - உடன்படிக்கையின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்வார்கள் - எனவே அவர்களிடம், “பாவம் இருக்காது” – ஏனெனில் மீறுதலே பாவம் -1யோவா 3:4.
  • திருமுழுக்குப் பெறுபவர் - உடன்படிக்கையின் வார்த்தைகளை மீறாமல், ஏற்று வாழ்வதால், அவர்களுக்கு – “சாபம் வராது”, ஆசீரே வரும் - இ.ச 11:26-28.
  • ஆகவே, திருமுழுக்குப் பெறுபவரிடம் - “பாவ சாபம் இருக்காது”.

 • எனவே, ஒருவர் “பாவ சாபம்” நீங்கி வாழ, என்ன செய்ய வேண்டும்?
 • அவர், மீட்படைந்து, அருட்பொழிவு பெற்று, திருமுழுக்கால், இயேசுவின் உடலாகிய தேவ சபையில், உறுப்பாக மாற வேண்டும்.

 
 
 
copyrights © 2012 catholicpentecostmission.in